• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-10 16:42:08    
கல்யாணமாம் கல்யாணம் அ

cri
வாலமீனுக்கும் விலங்குமீனுக்கும் கல்யாணம், சென்னாக்குனி கூட்டமெல்லாம் ஊர்கோலம் என்ற கானாப்பாடல் காலமென்றாலும், குத்தச் சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும், என்ற கிராமத்து மணம் கமழும் பாடல் எங்கும் ஒலித்த அந்த காலமென்றாலும், திருமணம் என்பது இரண்டு பேர் மட்டும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவெடுத்தோம், வாழ்ந்தோம் என்றல்லாமல் இரு குடும்பங்களும், உறவுகளும், நட்பும் புடை சூழ கொண்டாடப்படும் ஒரு விழாவாகவே அமைந்து வந்துள்ளது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்று கூறுவார்கள். வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு திருமணம் எனலாம். இரு மனங்கள் இணையும் ஒரு உன்னத சங்கமமே இல்லறம். இல்லற வாழ்க்கையை துவங்குகிறோம் என்பதை சமூகத்துக்கு அடையாளப்படுத்த உதவுவது திருமணம். ஆனால் இந்த திருமணங்களில் கூட எத்தனை மாற்றங்கள். பெரியோர் பார்த்து நிச்சயித்த திருமணம், காதல் திருமணம் என்று இரண்டு வகையாக பிரிக்கலாம் என்பது உண்மை. இருப்பினும், திருமணம் நடைபெறும் பாங்கும், வடிவமும்தான் எவ்வளவு வேறுபட்ட விதங்கள். இனம், மொழி, சமயம் என்று வேறுபடுத்தலாம் என்பது ஒருபுறமென்றால், நாகரிக வளர்ச்சியின், சமூக மாற்றத்தின் வெளிப்பாடகவும் கூட திருமணங்கள் புதுப்புது வடிவங்களில் நாம் காண கிடைப்பதை நாம் கவனிக்காமல் இருக்க இயலாது.

அந்த வகையில் சீனாவில் திருமணங்கள் எப்படியான வடிவங்களாக மாறியுள்ளன. அன்ரைய காலக்கட்டத்திலான திருமணங்களுக்கும், தற்போதைய நவநாகரீக முன்னேற்றத்தின், துரித உணவுக்கலாச்சார உலகின் திருமணங்களுக்குமிடையிலான உள்ளடக்கங்கள், பின்னணி ஆகியவற்றை பற்றி நாம் சில தகவல்களை அறிந்துகொள்வோம்.

1 2 3 4