
ஆனால் சீர்த்திருத்தமும், வெளிநாட்டுத் திறப்பும் சீனாவை புதுப்பொலிவூட்டும் பாதையில் வழிநடத்தியபின், திருமணங்களும், மக்களின் திருமண விழா தேவைகளும், இல்லறத்தை துவக்கத் தேவையான பொருட்களுமே கூட மாறத் தொடங்கின. கடிகாரம், மிதிவண்டி, தையல் இயந்திரம் என்ற மூம்மூர்த்திகளுக்கு பதிலாக, 80களில், கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி மற்றும் சலவை இயந்திரம் என்ற மூன்று வாரிசுகள் இடம்பிடித்தன. அதுவே 90 களில், வண்ணத் தொலைக்காட்சி, கார் மற்றும் வீடியோ கருவி ஆகியவற்றால் இடம் மாற்றப்பட்டன. மட்டுமன்றி தங்க மோதிரங்கள், காதணிகள், கழுத்தில் அணியும் சங்கிலிகள் எல்லாம் திருமண விழாவோடு தொடர்புடைய பொருட்களாக மாறின. 1 2 3 4
|