
லிமோசீன்ஸ் எனப்படும் உல்லாச கார்களும், வண்ணமலர்கள் அலங்கரித்த மண்டபங்கள் அல்லது கோயில்களும், பட்டும், நகைகளும், பூத்தையல் வேலைப்பாடுகள் அலங்கரிக்கும் கழுத்து முதல் தரையில் தேயத்தேய அணியும் கவுன் ஆடைகளும், வாகன அணி, வண்ணமிகு நிழற்படங்கள், வீடியோப் பதிவுகள், உல்லாச உணவகங்களின் விருந்து என் இன்று சீனாவில் திருமணங்கள் பளபளவென ஜொலிக்கும் அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவையெல்லாம் இன்றைய சீனாவின் நகர்ப்புற திருமணங்களில் காணப்படக்கூடிய முக்கிய உள்ளடக்கங்கள் எனலாம். ஆனா காலச்சக்கரத்தை ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு திருப்பி, அன்றைய நாட்களில் நடந்த திருமணங்களை பார்ப்போமேயானால் கதை வேறு விதம்.
சமூகப் பொருளாதார வளர்ச்சி குன்றிய அந்த நாட்களில் திருமணங்களுக்கு அவசியமான ஆணும் பெண்ணுமாக ஒரு இணையை தவிர வேறு மூன்று முக்கிய பொருட்கள் அவசியமாக இருந்தன. கடிகாரம், மிதிவண்டி மற்றும் தையல் இயந்திரம் ஆகிய மூன்றும் ஒரு குடும்பத்தின் மிக அவசிய தேவையாக கருதப்பட்டன. எனவே திருமணங்கள் என்றால் இந்த மூன்று முக்கிய பொருட்கள்தான் பெரிதும் முக்கியத்துவம் பெற்றன. 1960 களும், 70 களும் இந்த மூன்று பொருட்கள் காலமாக குறிப்பிடலாம்.
1 2 3 4
|