
மட்டுமல்ல, இன்றைக்குள்ள திருமண நிழற்படங்கள் எடுக்கும், கிட்டத்தட்ட ஒரு திரைப்பட நட்சத்திர இணையை போல் பாவித்து, ஒளிவெள்ளத்தில், இணையை ஓவியமாக்கும் வித்தைகள் எல்லாம் அப்போது இல்லை. அப்போதெல்லாம் திருமணம் முடித்தவர்கள் ஒரேயொரு கறுப்பு வெள்ளை நிழற்படத்தை மட்டும் எடுத்து, அதை தமது வீட்டில் திருமணத்தின் அடையாளமாக சுவரில் மாட்டி வைத்தனர். மட்டும்மல்ல சீனாவில் புரட்சி நடைபெற்ற காலமென்பதால், புரட்சியில் ஆர்வமும், பற்றும் கொண்ட மக்கள், பெரும்பாலும் சீருடைகளையும், உழைப்பாலர் அணியும் ஆடைகளையுமே அணிந்திருந்தனர். திருமண நிழற்படத்துக்கு புன்னகை புரிந்து அமர்ந்திருந்தபோதுக்குட இந்த சீருடைகளையே மக்கள் மதித்து அணிந்திருந்தனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. ஆடம்பர கோட் சூட்டோ, சீனத்து பளபளக்கும் பட்டோ அணிய, அதுவும் திருமண விழாவை நினைவூட்டும், நிழற்படத்துக்காகக் கூட அணிந்துகொள்ள மக்கள் மறுத்தனர்.
1 2 3 4
|