 tai chi quan, என்பது சீனாவின் பழமை வாய்ந்த ஒரு வகை உடல் பயிற்சி முறையாகும். ஆகஸ்ட் திங்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில், 10 ஆயிரம் பேர் அரங்கேற்றிய tai chi quan நிகழ்ச்சி, அனைத்துலக மக்களுக்கு சீனாவின் அந்த பாரம்பரிய விளையாட்டுப் பயிற்சியின் ஈர்ப்பு ஆற்றலை வெளிப்படுத்தியது. மிக முன்னதாக, tai chi quan, சீனப் பொது மக்களிடையே பரவலாகியது. tai chi quan உடல் பயிற்சி, நலவாழ்வு பாதுகாப்பு மற்றும் நோய் தடுப்புக்கான ஒரு முக்கிய வழிமுறையாகும் என்று நடைமுறைகள் நிரூபித்துள்ளன. இதன் மூலம், உடல் நலத்தை வலுப்படுத்தும் அதேவேளையில், உயர் இரத்த அழுத்த நோய் உள்ளிட்ட பல தீராத நோய்களுக்கான சிகிச்சைக்கும் துணை புரிய முடியும்.
நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, tai chi quan பயிற்சி செய்யும் போது, பயன்படுத்தப்படும் பின்னணி இசையாகும். tai chi quan பயிற்சி இந்த மெல்லிசையின் தாளலயத்தைப் போல் மென்மையானது. எழில் மிக்க இந்த குத்துச்சண்டை அசைவை பார்ப்பதற்கு மிகவும் மென்மையானது. ஆனால், இதற்கு மாபெரும் ஆற்றல் உண்டு. விளையாட்டுப் பயிற்சிகளில் ஒன்றான இது, எதிரிகளைத் தாக்கி தன்னை தானே பாதுகாக்கவும் உதவும். உணர்வு, மூச்சு, விளையாட்டு ஆகிய மூன்றையும் நெருக்கமாக இணைக்கும் விளையாட்டுப் பயிற்சி இதுவாகும். பாரம்பரிய சீன மருத்துவ ரீதியில், இது உடம்பில் qi எனும் ஆற்றலைக் கொண்டு செல்லும் பாதைகளையும், கிளை வழிகளையும் சீரமைத்து qi எனும் ஆற்றலை வலுப்படுத்தக்கூடியதாகும்.
1 2 3 4
|