• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-17 14:34:15    
tai chi எனும் உடல் பயிற்சி முறை

cri

சாங் சூ பூஃன் அம்மையாருக்கு இவ்வாண்டு 56 வயதாகிறது. ஓராண்டுக்கு முன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பல ஆண்டு கால சுறுசுறுப்பாக பணி புரிந்ததால், அவர் பல நோய்களுக்கு ஆளானார். குறிப்பாக, இரவில் தூக்கமின்மை என்ற பிரச்சினையில் அவர் கடுமையாக சிக்கிகுண்டதால், நன்றாக ஓய்வு பெற முடியாமல் போயிற்று. பகலில் ஆற்றல் இல்லாமல் சோர்வுடன் இருந்தார். தற்போது, மகளின் ஊக்கத்துடன், அவர் நாள்தோறும் காலையில், பூங்காவுக்குச் சென்று tai chi எனும் உடல் பயிற்சி செய்கின்றார். குறுகிய அரை ஆண்டு காலத்துக்குப் பின், அவரது தூக்கமின்மை பிரச்சினை நீக்கப்பட்டது. அவர் கூறியதாவது

முன்பு, எனது தூக்கமின்மை பிரச்சினை கடுமையாக இருந்தது. பல்வகை சீன மூலிகை மருந்துகள் மற்றும் மேலை நாட்டு மருந்துகளை உட்கொண்டேன். சிகிச்சை கருவிகளையும் வாங்கி பயன்படுத்தினேன். ஆனால், அந்த நோய்க்கு இதனால் பயன் ஏற்படவில்லை. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், நாள்தோறும் காலையில் பூங்காவில் tai chi எனும் உடல் பயிற்சி செய்கின்றேன். துவக்கக் காலத்தில், முதுகில் இறுக்கத்தை உணர்ந்தேன். பயிற்சியில் நீண்டகாலமாக ஊன்றி நின்ற பிறகு, உடல் இலேசாக உணர்ந்தேன். உடல் நலமும் மேம்பட்டது என்றார் அவர்.

தூக்கமின்மை பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால், மென்மையான ஒரு விளையாட்டுப் பயிற்சியான tai chi உடல் பயிற்சி எப்படி நோயை சிகிச்சை அளிக்கிறது என்பது பற்றி சாங் சூ பூஃன் அம்மையார் ஐயப்பட்டார். இந்தக் கேள்விக்கு tai chi பயிற்சியின் யாங் பிரிவின் பிரதிநிதியும், tai chi எனும் பயிற்சி நிபுணருமான fu sheng yuan விளக்கம் செய்தார். சீன பாரம்பரிய மருத்துவத்தின் படி, மனிதரின் உடம்பு ஒரு ஒட்டுமொத்த பகுதியாகும். Qi ஆற்றல் பரவும் பாதைகளும் கிளைவழிகளும் உடல் முழுவதும் இருக்கின்றன. அவை உடல் உறுப்புகளில் பயன் தரும் அதேவேளையில், கைகள் மற்றும் கால்களை இணைத்துள்ளன. tai chi பயிற்சியை செய்வது, இந்த qi ஆற்றல் செல்லும் பாதைகளையும் கிளைவழிகளையும் சீரமைக்கின்றது என்று அவர் கூறினார்.

1 2 3 4