• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-17 14:34:15    
tai chi எனும் உடல் பயிற்சி முறை

cri

நீண்டகாலமாக tai chi பயிற்சி செய்தால், பயம், மன அழுத்தம், கோபம் முதலிய நோய்கள் தளர் விடையும் என்று பெய்ஜிங் ஒலிம்பிக் tai chi பயிற்சி நிகழ்ச்சிக்கு வழிக்காட்டிய tai chi நிபுணர் cui zhong san கூறினார். அவர் கூறியதாவது

tai chi பயிற்சி மூலம், மனிதரின் மனதை நன்றாக அமைதி செய்யலாம். குறிப்பாக, தற்போது மக்கள் சுறுசுறுப்பாக பணி புரிய வேண்டிய நிலைமையில், அனைவருக்கும் அதிக நிர்பந்தத்தை உணர்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் அதிக சுமையை உணரும் போது, எந்த வகை விளையாட்டில் ஈடுபட்டு, அதிலிருந்து விடுவிக்கப்படலாம்? tai chi பயிற்சி ஒரு நல்ல தேர்வாகும். வெளிப்புறத்தில், உடலுக்கு பயிற்சி. உட்புறத்தில், மனத்துக்கு அமைதி. இந்தத் துறையில், வேறு எந்த ஒரு வகை விளையாட்டும் இத்தகைய பயன்களை தர முடியாது என்று கருதுகின்றேன் என்றார் அவர்.

தற்போது, சீனாவின் பழமை வாய்ந்த tai chi பயிற்சி மென்மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிகமான நண்பர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது. பிரிட்டனைச் சேர்ந்த Ugur Osman 18 ஆண்டுகளாக இப்பயிற்சியை செய்து வருகின்றார். தற்போது, பிரிட்டனின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஒரு சிறிய நகரில் அவர் ஒரு tai chi பள்ளியை நடத்துகின்றார். இந்தப் பள்ளியில் சுமார் 40 மாணவர்கள் tai chi பயிற்சியை கற்றுக்கொண்டிருக்கின்றனர். tai chi பயிற்சி பிரிட்டனில் பரந்த அளவில் பரவலாகி வருகின்றது என்று அவர் கூறினார். tai chi பயிற்சி உயிராற்றல் மிக்க பயிற்சியாகும். நீண்டகாலமாக பயிற்சி செய்தால் உடல் நலன் பெறலாம் என்று அவர் குறிப்பிட்டார். Ugur Osman மேலும் கூறியதாவது

இதர விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிகளுடன் ஒப்பிடுகையில் tai chi பயிற்சி தலைசிறந்த பயிற்சியாகும். எழுச்சிக்கும் உடலுக்கும், உடல் நலத்துக்கும் இது நன்மை பயக்கும். இது ஒரு வகை பயிற்சியாகவும் விளையாட்டாகவும் மட்டுமல்ல, ஒரு தத்துவமாகவும் திகழ்கின்றது. tai chi பயிற்சி எனக்கு அதிக நன்மை பயக்கின்றது என்றார் அவர்.

tai chi பயிற்சி உடல் கூறுவியல் விதிக்கேற்ற மென்மையான வகை விளையாட்டாகும். உலகில் இதனை பரவல் செய்ய சீன tai chi பயிற்சி நிபுணர்கள் முயற்சித்து இதனை மேலை நாட்டு மருத்துவ சிகிச்சைக்குத் துணை புரியும் வழிமுறையாக மாற்ற பாடுபட்டுவருகின்றனர்.


1 2 3 4