 சந்திர ஆய்வு வாகனம் என்பது, சந்திர மேற்பரப்பில் ஆய்வில் ஈடுபடும் ஒரு சிறப்பு வாகனமாகும். கடந்த சில ஆண்டுகளாக, விண்வெளி ஆய்வில் சீனா பல சாதனைகள் படைத்துள்ளன. அதேவேளையில், பல அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் சந்திர ஆய்வு வாகனம் பற்றிய ஆய்விலும் ஈடுபட்டு வருகின்றன. இன்று சீனாவால் தயாரிக்கப்பட்ட சில வகை சந்திர ஆய்வு வாகனங்கள் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
ஷாங்காய் மாநகரிலுள்ள ஒரு ஆய்வகத்தில், 6 சக்கரங்களைக் கொண்ட ஒரு பொன் நிற சந்திர ஆய்வு வாகனம், சந்திரனில் மேற்பரப்பிலுள்ள மண்ணைப் போன்ற எரிமலை சாம்பலால் உருவாக்கப்பட்ட சிக்கலான சந்திர மேற்பரப்பு மாதிரியில் ஓடியது. அந்த வாகன மாதிரியின் நீளம் சுமார் 1.5 மீட்டராகும். அகலம் ஒரு மீட்டராகும். எடை சுமார் 120 கிலோகிராம் என்று ஷாங்காய் விண்வெளிப் பயணத் தொகுதி திட்டப்பணி ஆய்வகத்தின் புதிய தொழில் நுட்பப் பிரிவின் துணைத் தலைவரும், சந்திர ஆய்வு வாகனத் திட்டப்பணியின் பொறுப்பாளருமான hu zhen yu கூறினார். இது அவர்கள் ஆராய்ந்த 3வது தலைமுறை மாதிரியாகும் என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது
3வது தலைமுறைமாதிரி வாகனம், முன்தைய மாதிரியின் அடிப்படையில் மேலும் அதிகமான பொறியியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதன் ஓடும் தொகுதியிலும் வழிகாட்டல் கட்டுப்பாட்டு தொகுதியிலும் விண்வெளிப் பயண நிலையான பாகங்கள் பொறுத்தப்படுகின்றன என்றார் அவர்.
1 2 3 4
|