• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-24 10:14:47    
சந்திர ஆய்வு வாகனம்

cri

தத்துவ ரீதியான மாதிரியிலிருந்து உண்மையான சந்திர ஆய்வு வாகனம் வரை, பல அறிவியல் தொழில் நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, சந்திரனின் ஈர்ப்பு ஆற்றல், பூமியில் இருப்பதை போன்று ஆறில் ஒரு பகுதி மட்டுமே. அதன் மேற்பரப்பிலான மண் மிகவும் மென்மையானது. ஆகையால், சந்திர ஆய்வு வாகனம் இத்தகைய சூழ்நிலையில் சரியாகப் இயங்கும் ஆற்றலை கொள்ள வேண்டும். மேலும், சந்திரனின் மேற்பரப்பில் சிக்கலான அமைவு கொண்டது. கற்கள், விண்கல் குழிகள், செங்குத்தான சிகரங்கள் முதலியவை அமைந்துள்ளன. இந்த நிலைமையில், சந்திர ஆய்வு வாகனம் வழுக்கிச் செல்லவோ கவிழ்ந்துவிடவோ கூடாது. இதுமட்டுமல்ல, முன் செல்வது, பின் நோக்கி ஓடுவது, திசையை மாற்றுவது, மலை ஏறுவது முதலிய திறன்களையும் இது கொண்டுள்ளது. தவிர, அதிக வானிலை மாற்றம், நீண்ட பகல் மற்றும் இரவு நேரங்கள் போன்ற பிரச்சினைகளை இது சந்தித்து சமாளிக்க வேண்டும்.

சந்திர ஆய்வு வாகனத் தயாரிப்பிலான மின்சார வளம், வழிகாட்டல், தரவு அனுப்புதல் முதலிய தொகுதிகளிலான முக்கிய தொழில் நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று Du zhen yu கூறினார். எடுத்துக்காட்டாக, சந்திர ஆய்வு வாகனத்தின் மேற்பகுதியில் மனிதரின் கண்களைப் போன்ற பார்க்கும் வசதி பொருத்தப்பட்டது. ஆய்வு வாகனம் சந்திரனின் மேற்பரப்பைக் கண்டதுடன், இந்த பார்வை வசதினூடாக மூலம் வாகனத்துக்கும் வழியிலுள்ள கடைகளுக்கும் இடையிலான தூரத்தை அளவிடலாம். வாகனத்தின் பின்புறத்தில் சூரிய எரியாற்றல் பலகை பொருத்தப்படுகின்றது. அதன் உதவியுடன் ஆய்வு வாகனம் 150 முதல் பூஜியத்துக்குக் கீழ் 180 டிகிரி செல்சியஸ் சென்டிகிரேட் வரையான காலநிலையில் இயங்க முடியும். மேலும் வாகனத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 200 மீட்டராகும்.

1 2 3 4