
இந்த சந்திர ஆய்வு வாகனம் 600 மில்லிமீட்டர் உயரமான தடைகளை கடந்து செல்லக் கூடும் என்று இந்த ஆய்வகத்தைச் சேர்ந்த மற்றொரு பணியாளர் மோ மிங் கூறியதாவது
சந்திரனின் மேற்பரப்பில் எரிமலை சாம்பல் பரவியுள்ளது. ஆனால், அதன் தன்மை வேறுபட்டது. வடகிழக்கு சீனாவின் wu da lian chi எனும் இடத்துக்குச் சென்று, எரிமலை சாம்பலைத் திரட்டினோம். வெவ்வேறான இடங்களின் எரிமலை சாம்பல்களை இணைத்து, அதன் தன்மையை அளவிட்டோம். பிறகு, எந்த வகை சக்கரத்தை பயன்படுத்தினால் கூடுதல் நன்மை பெற முடியும் என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டோம் என்றார் அவர்.
சந்திர ஆய்வு வாகனம் பற்றிய ஆய்வில் பல அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. விரைவில், சீனாவால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட பல சந்திர ஆய்வு வாகனங்கள் மக்களுக்கு அறிமுகமாகும் என்று நம்புகின்றோம். சில ஆண்டுகளுக்குப் பின், சந்திர மேற்பரப்பில் பயணம் செய்யும் சந்திர ஆய்வு வாகனம், பல்வேறு தரப்புகளின் மேம்பாடுகளை ஒன்றிணைத்து பயன்படுத்தும் என்று சீன சந்திர ஆய்வு திட்டப்பணியின் தலைமை ஆளுநர் luan en jie கூறினார். 1 2 3 4
|