• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-24 10:14:47    
சந்திர ஆய்வு வாகனம்

cri

ஷாங்ஹாய் மாநகரிலுள்ள ஆய்வு நிறுவனங்களைத் தவிர, தற்போது, ஹார்பின் பல்கலைக்கழகம், பெய்ஜிங் விமான மற்றும் விண்வெளி பயணப் பல்கலைக்கழகம், சீன விண்வெளிப் பயண அறிவியல் தொழில் நுட்ப குழுமம் உள்ளிட்ட 40க்கும் அதிகமான நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் சந்திர ஆய்வு வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலைமை, சீன விண்வெளி ஆய்வு தொழில் நுட்பத்தின் வேகமான வளர்ச்சியைக் காட்டுகின்றது.

சந்திரனுக்கு வணக்கம். நான் வருகின்றேன். சீனப் பாரம்பரிய கதையில், சீமாட்டி சாங் எர் சந்திர மாளிகைக்குச் சென்றார். இன்று, நான் சாங் எர் 1 எனும் விண்கலத்தின் மூலம் சீனாவின் வணக்கத்துடன் வந்திருக்கின்றேன். சந்திரன், வணக்கம். வணக்கம். சந்திரன்.

நீங்கள் கேட்டது. சீனாவின் முதலாவது சந்திர ஆய்வு செயற்கை கோளான சாங் ஏர் 1, பூமியிலிருந்து 3 இலட்சத்து 80 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சந்திரனின் சுற்று வட்டப்பாதையிலிருந்து பூமிக்கு அனுப்பிய ஒலியாகும். 2007ம் ஆண்டு அக்டோபர் திங்களில் விண்ணில் செலுத்தப்பட்ட இந்தச் செயற்கை கோள், இதுவரை மிக அதிகமான சந்திர ஆய்வு தரவுகளை திரும்பி அனுப்பியுள்ளது. உண்மையில், செங் ஏர் 1 என்பது சீனாவின் சந்திர ஆய்வு திட்டப்பணி ஏன் தொலை தூர விண்வெளி ஆய்வு திட்டப்பணியின் முதலாவது காலடி மட்டும் ஆகும். 2012ம் ஆண்டுக்கு முன், சந்திரத்தின் மேற்பரப்பில் ஆய்வு விண்கலத்தை கவனமாக தரையிறங்கச் செய்து, சந்திரனில் பயணம் ஆய்வு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. மேலும், 2020ம் ஆண்டுக்குள் சந்திரனின் மேற்பரப்பிலுள்ள மண் மாதிரியை பூமிக்குக் கொண்டு வர சீனா பாடுபடும்.

இந்தப் பின்னணியில், சந்திர ஆய்வு வாகனம் இத்திட்டப்பணிக்கான முக்கிய சாதனமாகியுள்ளது. தனது சந்திர ஆய்வு வாகனத்தின் சக்கரங்கள் சிறப்பாக உள்ளன என்று சீன வடக்கு வாகன ஆய்வகத்தைச் சேர்ந்த சந்திர ஆய்வு வாகனத்தின் வடிவமைப்பாளர் சூ போ கூறினார். அவர் கூறியதாவது

சக்கரத்தின் மையப் பகுதியில் ஒரு சாய்வான பகுதியை வடிவமைத்தேன். ஆகையால், மண நுழைந்தால், சக்கரம் ஓடும் போக்கில் அது தானாக வெளியேறும். மேலும், lசக்கங்களை சுற்றி உலோகச் சங்கிலியை அமைத்துள்ளோம். அதன் மூலம், வாகனத்தின் ஓடும் நிதான தன்மை வலுப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

1 2 3 4