• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-26 08:59:59    
உணவுப் பாதுகாப்புக்கான கட்டுப்பாடு

cri

உணவுப் பாதுகாப்பில் சீன அரசின் என்ன மனபான்மை

முதலில் சிறப்பு கட்டுப்பாட்டுப் பின்னணி பற்றி.

மார்ச் திங்கள் 3ம் நாள் துவங்கிய சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டில் மாநாட்டின் பிரதிநிதிகள் முக்கியமாக விவாதிக்கும் பிரச்சினைகளில் உணவுப் பாதுகாப்பு பிரச்சினை ஒன்றாகும். கடந்த டிசெம்பர் திங்களில் சீனாவில் நிகழ்ந்த குழந்தைகளுக்கான சான்லு பால் மாவு தொடர்பான சம்பவம் மக்களிடையே கவலையை எழுப்பியது. மெலமின் என்னும் வேதியியல் வேதியியல் உட்சேர்க்கைப் பொருள் இந்த சம்பவம் ஏற்பட்டதன் முக்கிய காரணியாகும். சட்டத்துக்கு புறம்பாக அளவுக்கு மீறிய மெலமின் சேர்ப்பு உணவுப் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலை உருவாக்கியது. குறிப்பாக குழந்தைகளின் வளர்ச்சிக்கு அது கடும் ஆபத்தாக அமைந்தது.

இந்த சம்பவம் நிகழ்ந்த பின் சீன அரசவையின் உடனடி ஏற்பாட்டில் சுகாதார அமைச்சகம், தொழிற்துறை மற்றும் தகவல் மயமாக்கத் துறை, இடர்காப்புத் துறை, கண்காணிப்புத் துறை, வேளாண் துறை, வணிகத் துறை, தொழில் மற்றும் வணிக தலைமை ஆணையகம், தரப்பரிசோதனை தலைமை ஆணையகம், உணவு மற்றும் மருந்து கண்காணிப்பு ஆணையகம் உள்ளிட்ட 9 அமைச்சகங்கள் இணைந்து நாடு தழுவிய கட்டுப்பாட்டுக் குழு ஒன்றை நிறுவின. கடந்த டிசெம்பர் திங்கள் தொடங்கி, இந்த கட்டுப்பாட்டுக் குழுவின் தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறையிலான கட்டுப்பாட்டு நடவடிக்கை மூன்று காலகட்டங்களாக பிரித்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது 4 திங்கள் காலம் நீடிக்கும். இது மட்டுமல்ல பிப்ரவரி 28ம் நாள் நடைபெற்ற 11வது சீன தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் 7வது கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட "சீன மக்கள் குடியரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில்" வேதியியல் உட்சேர்க்கைப் பொருள் பயன்பாடு மற்றும் உற்பத்தி குறித்து தெள்ளத்தெளிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. தொழில் நுட்பரீதியில் தேவைப்படும் பொருள் மற்றும் அளவை தவிர, உணவுப் பொருட்களில் இத்தகைய வேதியியல் உட்சேர்க்கைப் பொருட்கள் சேர்க்கப்படக் கூடாது என்று விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் 43வது முதல் 48வது வரையான 6 விதிகள் வேதியியல் உட்சேர்க்கைப் பொருள் பயன்பாடு பற்றி கடுமையான கண்காணிப்பு விளக்கங்களை வலியுறுத்துகின்றன. அதாவது தேவையில்லாத பட்சம் மனித உடம்புக்கு தீங்கு விளைவிக்காத பொருளைக் கூட உட்சேர்க்கைப் பொருளாக பயன்படுத்தக் கூடாது என்பதாகும். ஆபத்து மதிப்பீட்டின் கீழ் பாதுகாப்பாகவும் பயன்பாட்டுக்கு உரியதாகவும் உறுதிப்படுத்தப்படும் நிலையில் தான் வேதியியல் உட்சேர்க்கைப் பொருள் பயன்படுத்தப்படலாம். இல்லாவிடில் இது சட்டமீறலாக கையாளப்படும் என்று விதிகள் விதிக்கின்றன.

1 2 3 4