
அடுத்து சிறப்பு கட்டுப்பாட்டின் இலக்கு மற்றும் கடமை.
நாடு முழுவதில் உணவுப் பொருட்கள் தயாரிப்புத் துறையில் சட்டப்படி உட்கொள்ள முடியாத பொருளை சேர்ப்பதற்கு தண்டனை விதித்து உட்சேர்க்கைப் பொருளை சேர்ப்பதை கட்டுப்படுத்தி மக்களின் உடல்நலப் பாதுகாப்பில் உண்மையாக கவனம் செலுத்துவதே கட்டுப்பாட்டு நடவடிக்கையின் நோக்கமாகும். ஒருங்கிணைந்த முறையில் உள்ளூர் அரசாங்கங்களின் பொறுப்பிலும் வாரியங்களின் கட்டுப்பாட்டிலும் பல்வேறு தரப்புகள் கூட்டாக இந்த உணவுப் பாதுகாப்பு பிரச்சினையை தீர்க்கும் பணிவழி முறை நிறைவேறியுள்ளது. நான்கு திங்களில் மூன்று பகுதிகளாக சட்டமீறலை தாக்கும் அதேவேளையில் வேதியியல் உட்சேர்க்கைப் பொருள் உற்பத்தி மற்றும் பயன்பாடு மீதான நீண்டகால கண்காணிப்பு முறையின் கட்டுமானத்தையும் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளையும் பணியாளர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
கடந்த டிசெம்பர் 10ம் நாள் முதல் 2009ம் ஆண்டு ஜனவரி 10ம் நாள் வரையான முதலாவது கட்டத்தில் பல்வேறு துறைகளில் தற்சோதனை செய்து திருத்தஙக்கள் செய்யப்பட்டன. இரண்டாவது கட்டத்தில் கட்டுப்பாட்டுப் பணி ஆழமாக சரிபடுத்தப்படும். இது ஜனவரி 11ம் நாள் முதல் மார்ச் 10ம் நாள் வரை நிறைவேற்றப்படும். மூன்றாவது கட்டத்தில் வெற்றிகரமான பயன்களை உறுதிப்படுத்தி நீண்டகால பலன் தரும் அமைப்பு முறை நிறுவப்படும். இது மார்ச் 11ம் நாள் முதல் ஏப்ரல் 10ம் நாள் வரையான காலத்தில் நிறைவேற்றப்படும்.
1 2 3 4
|