இனி சட்டத்துக்கு புறம்பாக உட்சேர்க்கைப் பொருளை சேர்ப்பது கட்டுப்படுத்தப்பட்டு பயன் காணப்பட்டுள்ளதை அறிவோம்.
கடந்த டிசெம்பர் திங்கள் சிறப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கை துவங்கிய பின் சுகாதார அமைச்சகம் தலைமையிலான சிறப்பு கட்டுப்பாட்டுக் குழு திட்டத்தை வகுத்து தற்சோதனை செய்யும் அறிக்கையை வெளியிட்டு 21 உட்சேர்க்கைப் பொருட்களையும் கட்டற்ற முறையில் உட்சேர்க்கைப் பொருளாக பயன்படுத்தப்படும் 14 பொருட்களையும் "கலுப்புப் பட்டியலில்"சேர்த்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
ஜனவரி திங்களின் இறுதி வரை சீனாவில் 7 இலட்சத்து 70 ஆயிரம் பேர் இந்த நடவடிக்கைகளில் பங்கு எடுத்துள்ளனர். 13 இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமான உணவுப் பொருட்களையும் உட்சேர்க்கைப் பொருட்களையும் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் சோதனை செய்யப்பட்டன. மக்களிடமிருந்து வந்த ஆயிரத்து 394 புகார்கள் விசாரிக்கப்பட்டன. 1274 வழக்குகள் சோதனையிடப்பட்டு கையாளப்பட்டன. சட்டத்தை மீறியவர்கள் என ஐயத்துக்குரிய 7 பேர் இடர்காப்பின் நீதி வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் சட்டப்படி கைது செய்யப்பட்டனர்.
கடைசியாக ஜுன் திங்கள் முதல் நாள் தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ள உணவுப் பாதுகாப்பு சட்டம்.
1 2 3 4
|