 2008ஆம் ஆண்டு மே திங்களில் இருகரை உறவில் ஆக்கப்பூர்வ மாற்றங்கள் ஏற்பட்ட போது, சீன கோமின்தாங் கட்சியின் தலைவரான Wu Boxiong பிரதிநிதிக் குழுவுக்கு தலைமை தாங்கி சீனப் பெருநிலப்பகுதியில் பயணம் மேற்கொண்டார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கோமின்தாங் கட்சிக்கும் இடையிலான பரிமாற்றத்தையும் பேச்சுவார்த்தையையும் இப்பயணத்தின் மூலம் அவர் முன்னேற்றினார். சீன கோமின்தாங் கட்சி அவரது நேரடி தலைமையில் 2008ஆம் ஆண்டிற்கான தைவான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. சீன கோமின்தாங் கட்சியின் தற்போதைய தலைவராக உள்ளார் Wu Boxiong.

70 வயதான Wu Boxiong அரசியல் துறையில் ஈடுபட்ட குடும்பத்தில் பிறந்தவர். தைவான் Tao Yuan மாவட்டத் தலைவர், தைபெய் நகராட்சித் தலைவர், சீன கோமின்தாங் கட்சி மத்திய கமிட்டியின் தலைமைச் செயலாளர் முதலிய பதவிகளை வகித்ததால், அவர் "தைவான் அரசியல் துறையில் வாடாத மரம்" என புகழ்பெற்றுள்ளார்.
1 2 3 4
|