
2008ஆம் ஆண்டு மே திங்களில் பிரதிநிதிக் குழுவுக்கு தலைமை தாங்கி வந்ததே, கோமின்தாங் கட்சித் தலைவராக பதவியேற்ற பின், Wu Boxiong சீனப் பெருநிலப்பகுதியில் மேற்கொண்ட முதல் பயணமாகும். அப்பயணத்தின் போது, ஒரே சீனா என்ற கொள்கையில் ஊன்றி நிற்கும் அடிப்படையில் சர்ச்சைகளை ஒதுக்கி வைத்து, இருதரப்பும் வெற்றி பெறக் கூடிய நிலையை உருவாக்க வேண்டும் என்று கோமின்தாங் கட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒருமனதாக வலியுறுத்தின.
நண்பர்களுடன் பழக விரும்பும் Wu Boxiong நகைச்சுவை உணர்வு மிக்கவர். தைவான் தீவில் புதுமையான அரசியல் பாணியை அவர் படைத்துள்ளார். இவ்வாண்டு அவரது பதவிக்காலம் முடிவடையும். அரசியல் துறையிலிருந்து விலகி புத்த மதத் துறைக்குத் திரும்பி, அறக்கொடை நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக புத்த மத நம்பிக்கை கொண்ட அவர் பலமுறை தெரிவித்துள்ளார். அவரது மனதில் புத்த மதமே இறுதி இலக்காகும். 1 2 3 4
|