• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International

அருமையான திபெத் சுற்றுலா பொது அறிவுப்போட்டி

திபெத் தன்னாட்சி பிரதேசம், சீனாவின் தென்மேற்கு எல்லைப்புறத்திலும், சின் காய்-திபெத் பீடபூமியின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. அதன் சிறப்பான இயற்கைக் காட்சித் தலங்கள், பழமையான தேசிய இன பழக்க வழக்கங்கள், செழுமையான தேசிய இனப் பண்பாடு ஆகியவை எண்ணற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளைக் ஈர்த்துள்ளன. சீனாவின் அழகான திபெத்தைப் மேலும் அதிகமானோர், புரிந்துகொள்வதற்காக, 2009ஆம் ஆண்டு, ஏப்ரல் 15ஆம் நாள் தொடக்கம், அருமையான திபெத் என்னும் இணைய தளம் பொது அறிவுப் போட்டியைச் சீன வானொலி நிலையமும், சீனத் திபெத் தன்னாட்சி பிரதேச அரசின் செய்தி அலுவலகமும் கூட்டாக நடத்தத் தொடங்கும்.

போட்டிக் காலம்: 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 15 - மே 31

போட்டி விதிமுறைகள்: இணைய தளத்தில் விடையளித்தல், என் மனதிலுள்ள அழகான திபெத் (அதாவது திபெத் பற்றிய உங்களது கருத்துக்களை எழுதுவது) ஆகிய இரண்டு பகுதிகள் இப்போட்டியில் இடம் பெறுகின்றன.

போட்டியில், 8 கேள்விகள் இடம் பெறுகின்றன. எல்லா கேள்விகளுக்கும் சரியான விடையளித்து, திபெத் பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுகின்ற நேயர்களுக்குப் பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

பரிசுகள்:

இப்போட்டியில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு நேயர்களிலிடமிருந்து, சிறப்புப் பரிசு பெறும் நேயர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். வெற்றி பெற்றவர், இலவசமாக சீனாவுக்கு வந்து, சுற்றுலா மேற்கொள்வார்கள்.

முதலாவது பரிசு: 15 நேயர்கள், ஒவ்வொருவருக்கும் திபெத் தாங்கா ஓவியம்

 இரண்டாவது பரிசு: 30 நேயர்கள், ஒவ்வொருவருக்கும் திபெத் பாணியில் தயாரிக்கப்பட்ட பூத்தையல் கைவினை கொண்ட பை

மூன்றாவது பரிசு: 50 நேயர்கள், ஒவ்வொருவருக்கும் தேசிய இனப் பாணியில் தயாரிக்கப்பட்ட T-Shirt

பரிசு பெற்றவர்களின் பெயர்ப் பட்டியல் சீன வானொலி இணையதளத்தில் வெளியிடப்படும்.

குறிப்பு: போட்டி விதிமுறைகளுக்கு விளக்கம் கூறும் உரிமை சீன வானொலி நிலையத்துக்கு உண்டு.

மனப்பதிவு
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான லாசா, ஏறக்குறைய 1300 ஆண்டுகால வரலாறு கொண்ட பண்டைய நகராகும். இந்நகரம், யார்லுங்ட்சாங்போ ஆற்றின் கிளையான லாசா நதியின் வட கரையில் இருக்கிறது.
பயணம்
 • பயணம் பற்றி

 • இந்தக் கட்டுரை, லாசா, ஷிகாசெ, நிங்ச்சி ஆகிய மூன்று புகழ்பெற்ற காட்சியிடங்களைப் பற்றி அறிமுகப்படுத்துகின்றது.
 • திபெத்திற்கு செல்ல சுற்றுலா அனுமதிச் சான்று

 • சீனச் சட்டவிதிகளின் படி வெளிநாட்டுப் பயணிகள்  திபெத்தில் நுழையும் அனுமதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
  லாசா
  லாசா நகரம், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் மட்டுமல்ல, திபெத்தின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு மையமும் ஆகும்.
  ஷிகாசெ
  ஷிகாசெ நகர், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது, கடல் மட்டத்திலிருந்து 3800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
  நிங்ச்சி
  தொலைவிலிருந்து பார்க்கும்போது மலை தொடர்கள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன. அருகிலிருந்து பார்க்கும் போது, காடுகளால் அடர்ந்ததாக காணப்படுகிறது.
  திபெத் இசை

  விழாக்கள்
  திபெத்தில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. திபெத் புத்தாண்டு, வெண்ணெய் விளக்கு விழா, ஷோதோன் விழா ஆகியவை, திபெத்தின் மூன்று மிக முக்கிய கோலாகல விழாக்களாகும்.