 45 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1963ம் ஆண்டில் சீனா ஆப்பிரிக்காவுக்கு முதலாவது மருத்துவ உதவி அணியை அனுப்பியது. கடந்த 45 ஆண்டுகளில், சீனா மொத்தம் 20 ஆயிரத்துக்கு அதிகமான மருத்துவப் பணியாளர்களை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. அந்த மருத்துவ பணியாளர்கள் ஆப்பிரிக்க நாடுகளில் சுறுசுறுப்பாகப் பணி புரிந்து, அந்தந்த நாடுகளின் அரசுகள் மற்றும் மக்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் பெற்றுள்ளனர். அண்மையில், சீனாவின் ஹெய் லுங் ச்சிங் மாநிலம் Mauritaniaவுக்கு அனுப்பிய 27வது மருத்துவ உதவி அணியை எமது செய்தியாளர் பேட்டிக் கண்டார்.
லீ வெய் ஆன் என்பவர் இந்த அணியின் தலைவராவார். ஆப்பிரிக்காவிலான பணி மற்றும் வாழ்க்கை பற்றி அவர் புன்னகையுடன் எடுத்துக்கூறினார். அவரது உரையிலிருந்து ஆப்பிரிக்க வாழ்க்கை பற்றி ஓரளவு தெரிந்து கொள்ளலாம். அவர் கூறியதாவது
வறண்ட காலத்தில், குளிர் காற்று வசதி பயன்படுத்தப்படும் நிலைமையில், அறையில் தட்பவெப்பம் சுமார் 35 டிகிரி செல்சியஸ் அளவில் குறைக்கப்படலாம். வெயில் இருந்தால், 45 டிகிரி செல்சியஸ் முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை அடையலாம். இது சாதாரண தட்பவெப்ப நிலையாகும். மிக வெப்பமான வானிலை பற்றி நாம் ஒருமுறை அளவிட்டோம். ஆனால், அளவிடும் கருவி உயர் வெப்பத்தால் நாசமடைந்தது. மிக உயர் தட்பவெப்பம் சுமார் 70 டிகிரி செல்சியஸ் அடையாலம் என்று மதிப்பிட்டோம்.
1 2 3 4
|