• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-31 09:52:34    
ஆப்பிரிக்காவுக்கான சீன மருத்துவ உதவி பணி

cri

உடம்பிலான சிக்கல் கடுமையான பிரச்சினை இல்லை. பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள தாய்நாட்டையும் குடும்பத்தினர்களையும் பிரிந்து அவர்கள் நினைவில் மூழ்கி, அவர்களை பற்றி யோசிப்பது இந்த மருத்துவ உதவி அணியினரின் வழக்கமாகும். லீ வெய் ஆன் கூறியதாவது

அந்நகரைச் சென்றடைந்த போது, ஒரு தொலைபேசி வசதி, ஒரு கணினி மட்டுமே கொண்டு குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. அஞ்சல் வழியில் அனுப்பும் கடிதங்கள் 3 திங்களுக்குப் பிற்கே, கிடைக்கலாம். தொலைபேசி வசதி பொது அலுவலுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. நாங்கள் அதன் மூலம் வீட்டுக்கு பேசவில்லை. கணினி மூலம் மட்டும் குடும்பத்தினருடன் எப்போதாவது பேசினோம் என்றார் அவர்.

2 ஆண்டு காலத்தில், 3 சீன மருத்துவர்கள் முயற்சியுடன் சிறப்பாகப் பணி புரிந்தனர். அவர்கள் மொத்தம் 800 அறுவை சிகிச்சை அளித்தனர். அவர்களுடைய உணர்வும் மருத்துவ தொழில் நுட்பமும் உள்ளூர் மக்களின் நம்பிக்கையையும் மதிப்பையையும் வென்றன. ஒரு பீட்சா, சில மாம் பழங்கள், ஏன் ஒரு கோழி, ஒரு ஆடு ஆகியவற்றை கொடுத்து உள்ளூர் மக்கள் சீன மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அவற்றைப் பார்த்து சீன மருத்துவர்கள் மிகவும் மகிழ்ச்சியும் ஆறுதலும் அடைந்தனர். மருத்துவர் Sun yun chang கூறியதாவது

ஒரு முறை அறுவை சிகிச்சை மூலம் இரட்டை பிள்ளைகள் பிறந்தனர். தாயும் பிள்ளைகளும் நலமுடனும் பாதுகாப்புடனும் இருந்தனர். நாங்களு மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம் என்றார் அவர்.

சிறந்த திறமையை கண்டு, Mauritania தலைமை அமைச்சர் அரசு தலைவரின் கையொப்பமுடைய கௌரவ விருதை அவர்களுக்கு வழங்கினார். இது Mauritania தேசிய நிலை மீயுயர் விருதாகும். கடந்த 40க்கு அதிகமான ஆண்டுகளில் ஹெய் லுங் ச்சியாங் மருத்துவ உதவி அணி இப்புகழை பெறுவது இதுவே முதல் முறையாகும்.


1 2 3 4