
Salebaby நகரில் போக்குவரத்து வசதி குறைவு. வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் பற்றாக்குறையாகும். மருத்துவ அணியின் 7 பணியாளர்கள், 3 பிரிவுகளாக திங்கள்தோறும் 700 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தலைநகர் Nouakchott க்குச் சென்று, அடுத்த திங்களுக்கான வாழ்க்கை பயன்பாட்டுப் பொருட்களை வாங்க வேண்டும். அவை எல்லாம் அரிசி, கோதுமை, உணவு எண்ணெய், முட்டை முதலிய நீண்டகாலமாக வைக்கப்படக் கூடிய அன்றாட வாழ்க்கை பொருட்களாகும். மழைக் காலத்தில், பாதைகள் போக்குவரத்துக்கு வசதியாக இருக்காது. அந்த நிலைமையில், சில திங்கள் காலம் தலைநகருக்குச் செல்ல முடிாத நிலை எழும். ஆகையால், அவர்கள் மிக எளிதான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டியிருந்தது. வாழ்க்கை நிலைமையை மேம்படுத்த, அவர்கள், சீனாவிலிருந்து எடுத்து வந்த விதைகளை பயிரிட்டனர். விளைச்சல் மிகக் குறைவாக இருந்தபோதிலும், தேவைக்கு உதவுவதால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.
மருத்துவர்கள் கூட சில வேளையில் நோய்வாய்ப்படுவர். Maruritania, உலகில் மிக அதிக மலேரியா எனும் குறிர்காய்ச்சல் ஏற்படும் நாடாகும். Sabebaby நகரம் அந்நாட்டில் மிக அதிக குறிர்காய்ச்சல் ஏற்படும் பிரதேசமாகும். 2 ஆண்டுகால கடினமான பணி மற்றும் வாழ்க்கையில், 3 சீன மருத்துவர்கள் இந்நோய்க்கு ஆளாயினர். லீ வெய் ஆன் கூறியதாவது
ஓராண்டின் 365 நாட்களும் கொசுக்களால் அல்லல்பட்டோம். அந்த கொசுகள் மலேரியா குறிர்காய்ச்சல் நோயை பரவல் செய்கின்றன. மேலும் ஈக்களின் எண்ணிக்கை பயங்கரமானது. எமது பணியாளர்கள் அனைவருமே குறிர்காய்ச்சல் நோய்வாய்ப்பட்ட அனுபவம் கொண்டுள்ளனர் என்றார் அவர்.
1 2 3 4
|