• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-31 09:52:34    
ஆப்பிரிக்காவுக்கான சீன மருத்துவ உதவி பணி

cri

ஆப்பிரிக்கக் கண்டத்தின் உயர் வெப்பம், சீன மருத்துவர்களைப் பொருத்த வரை பரிசோதனையாகவும் அறைகூவலாகவும் திகழ்கின்றது. Maruritaniaவின் உயர் வெப்பமுடைய வறண்ட காலநிலையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் சொந்த நாட்டின் கோடைக்காலம் சொர்க்கம் போல் இருக்கின்றது. Maruritaniaவில் பகலில், வெளியே நின்றால்,உடல் வியர்த்துப் போகும் என்று லீ வெய் ஆன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது

அதிக அளவில் வியர்த்ததால், மருத்துவத் தளத்தில் சல்லடை வழியாய்ரி நீர் சொரியும்வசதி கொண்ட வீடு ஒன்று கட்டியமைக்கப்பட்டது. மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்ட நீர் ஒரு பெரிய இரும்பு பெட்டியில் சேமிக்கப்படுகின்றது. வீட்டுக்கு வெளியே அந்தப் பெட்டியிலுள்ள நீர் சூரிய வெப்பத்தால் சூடுபடுத்தப்பட்டப் பின், நேரடியாக குளிக்கப் பயன்படுத்தப்பட முடியாது. மிகவும் வெப்பமாக இருக்கும். அங்குள்ள வறண்ட கால நிலையில் மழையும் காணப்படாது என்றார் அவர்.

2006ம் ஆண்டு ஜுலை திங்கள் லீ வெய் ஆன்னின் மருத்துவ அணி, பத்து மணி நேரத்துக்கு அதிகமான விமானப் பயணத்துக்குப் பின், 700 கிலோமீட்டர் பாலைவன பயணம் மூலம், Maruritaniaவின் Selibaby நகரம் சென்றடைந்தது. Selibaby நகரிலுள்ள மருத்துவமனை ஒன்று சீனாவின் உதவியால் நிறுவப்பட்டது. இதற்கு அருகிலுள்ள சுமார் ஒரு இலட்சம் மக்களின் மருத்துவ சிகிச்சை மற்றும் நலவாழ்வு பணிக்கு இது பொறுப்பேற்கின்றது. அப்போது, இந்த மருத்துவமனையின் இயக்குநர் ஒருவர் மட்டும் மருத்துவ சிகிச்சைக்கான சான்று இதழ் கொண்டுள்ளார். ஒரு சில செவிலியருக்கு மிக எளிதான பணிகளை மேற்கொள்ள முடியும். எஞ்சிய பணி அனைத்துக்கும் சீனாவின் மருத்துவ உதவி அணி பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு உறுதிபட்ட பணி நேரம் எதுவும் இல்லை. பகலிலும் இரவிலும் பணியில் ஈடுபட வேண்டியிருந்தது. மருத்துவர் சாங் லீ சின் அம்மையார் இது பற்றி கூறியதாவது

தங்கும் விடுதியில் சில நாய்கள் உள்ளன. இரவில், அவை குலைத்தால், ஏதோ அவசர தேவை ஏற்பட்டது என்று புரிந்து கொள்வோம். நோயாளிகளுடன் பேசுவதன் மூலம் பரிமாற்றம் செய்ய முடியவில்லை. காரணம் அவர்கள் பேசும் மொழி எமக்கு தெரியாது. அந்நாட்டில் 4 தேசிய இனங்கள் உள்ளன. நோயாளிகள் தேசிய இன மொழியில் பேசுகின்றனர். செவிலியர் பிரெஞ்சு மொழியில் பேசலாம். அவர்கள் நோயாளிகளுடன் தேசிய இன மொழியில்ம் பேசிய பின், பிரெஞ்சில் மொழி பெயர்த்து, எங்களுடன் பரிமாற்றம் செய்கின்றனர். ஆனால், எங்களுக்கும் அதிக பிரெஞ்சு மொழி தெரியாது. முன்பு சேரிக்கப்பட்ட செழிப்பான சிகிச்சை அனுபவம் மூலம், நோயாளிகளின் நோய் நிலைமையை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

1 2 3 4