 சீனாவில் 30 ஆண்டுகால சீர்த்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்றைக்கு உலகமே வியந்து பாராட்டும் வகையில் வளர்ந்து நிற்கும் சீனாவில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பண்பாட்டு புரட்சியின் முடிவிலிருந்தனர். படிப்படியான வளர்ச்சி, சீரான வழிநடத்திலின் துணையோடு நனவாகியுள்ளது.

சரி, இந்த 30 ஆண்டுகால சீர்த்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பிலான பண்பாட்டு மாற்றங்களை பற்றிய ஒரு பார்வையாக, திருமணங்களிலான மாற்றங்களை பற்றிய கடந்த வாரம் சில் தகவல்களை வழங்கினோம்.
நாகரிக வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்தால் நம்முடைய பெற்றோர் காலத்திலிருந்த சில வழக்கங்கள் இன்றைக்கு இல்லாமல் போயிருக்கலாம், ஒரு சில மாறியிருக்கலாம். இரு மனங்கள் இணையும் திருமணமும் இதற்கு விதிவிலக்கல்ல. நமக்கு நினைவு தெரிந்த காலத்திலி்ருந்தே கூட புதுப்புது அம்சங்கள் உட்புகுந்து திருமணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை நாம் கவனித்திருப்போம்.
1 2 3 4
|