• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Apr 10th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-31 09:52:15    
திருமணங்கள்

cri

இன்றைக்குள்ள மணமகள் வைர மோதிரம் இருந்தால்தான் திருமணம் நடந்த மனநிறைவு அடையும் நிலை. நிழற்படக்கலைஞர் ஒருவர் கையில் படக்கருவியுடன் மணமக்களை நிற்க வைத்து, சிரிக்கச் சொல்லி, படம் எடுத்த காலம் மலையேறிவிட்டது. இன்றைக்கு படைப்பாற்றலும், ஒரு வித கலைநயமும் கொண்ட, நிழற்பட தொகுப்பையே மணமக்கள் விரும்புகின்றனர். அரசனும், அரசியுமாக அலங்கரித்து படமெடுப்பது, விதவிதமான பாணியில் உடைகளை மாற்றி படமெடுப்பது என்று அழகியல் கண்ணோட்டம் நிழற்படங்களில் காணப்படுகிறது.

21ம் நூற்றாண்டு தொடங்கிய பின், வீடு மற்றும் வீட்டுமனைச் சந்தை பெரிதும் வளர்ச்சியடையத் தொடங்க, அடுக்குமாடி குடியிருப்புகள் பரவலாகிப்போக, மக்களின் தேவையும் அதிகமாயின. காலப்போக்கில், நகரங்களில் வசிக்க வீடு கிடைப்பது கடினம் என்ற நிலைமை ஏற்பட்டது. ஆக இப்போது திருமணம் செய்வதற்கு முன், நகரங்களில் வசிக்கும் பெரும்பாலான இளைஞர்கள், பணம் சேமித்து, அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்கி தனதாக்கிக் கொள்வதை ஒரு முன்னிபந்தனை கோரிக்கையாக வைத்துள்ளனர். இன்றைக்குள்ள இளைஞர்கள் திருமணம் செய்வதற்கு ஏகத்துக்கும் யோசிக்கும் சூழல் உருவாகியுள்ளது. வீடும், காரும் அவசியம் என்ற ஒரு சூழலில், தனியே தலையெடுத்து, சொந்தமாக வாழத்தொடங்கும் இளைஞர்கள் மீண்டும் பெற்றோரிடம் உதவிக்கு திரும்புகின்றனர். சீனாவில் பொதுவாக ஆணோ, பெண்ணோ படித்து முடித்து வேலை கிடைத்த பின் சொந்தமாக தாங்களே வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வழிதேடுகின்றனர். இதுவே மிகவும் பரவலாக காணப்படும் வழமை. வளர்ந்து வருமானம் ஈட்டத் தொடங்கிய பின்னும் பெற்றோருக்கு சுமையாக இருக்கக்கூடாது என்ற எண்ணமே இதற்கு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் திருமணங்களுக்கு அவசியம் என்று காலச்சக்கரத்தின் சுழற்சியில் புதிதாக இணைந்துகொண்ட அத்தியாவாசிய பொருட்களான வீடு, கார் முதலியவற்றை சொந்தமாக வாங்க 20 களில், வாழ்க்கையை தொடங்கிய இளைஞர்கள் அனைவரும் கோடீஸ்வரர்களா என்ன? ஆக மறுபடியும் பெற்றோரிடமே உதவிக்கு நிற்கும் நிலை.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040