
2008ம் ஆண்டு 8ம் எண் ராசியானது, மங்கலகரமானது என்ற சீன மக்களின் நம்பிக்கையின் காரணம், திருமணத்திற்கு பொருத்தமான ஆண்டாக பல இணைகளால் தெரிவு செய்யப்பட்டது. 2008 ஒலிம்பிக் ஆண்டு என்பது ஒருபுறம், மறுபுறம் சீன மக்களை பொறுத்தவரை திருமணத்திற்கு ஏற்ற ஆண்டாகவும் அமைந்தது.
நாம் முன்னரே கடந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டது போல, 60 களிலும் 70 களிலும் மூன்று முக்கிய பொருட்கள் குடும்பத்தை துவக்குவதற்கு அவசியமானவையாக கருதப்பட்டன. கடிகாரம், மிதிவண்டி மற்றும் தையல் இயந்திரம் ஆகிய மூன்றும் ஒரு குடும்பத்தின் மிக அவசிய தேவையாக கருதப்பட்டன. இவை முன்று மட்டும்தானா என்றால் முக்கியமானவையாக இவை மூன்று இருப்பினும், பண்டையகாலம் தொட்டு வந்த நடைமுறைகளை அலசினால், இன்னும் பல அம்சங்கள் திருமணத்தோடு, திருமணச் சடங்கோடு ஒன்று கலந்திருந்ததை அறிய முடிகிறது. அவை எவை என்று பார்ப்போமா? 1 2 3 4
|