• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-08 10:26:10    
தைவான் மீதான Tang Shubei என்பவரின் அன்புணர்வு அ

cri

தைவான் நீரிணை இருகரை உறவின் வளர்ச்சியைக் கவனிக்கும் மக்கள், Tang Shubei என்ற பெயரை மறக்கப் போவதில்லை. சீன அரசவையின் தைவான் விவகாரப் பணியகத்தின் துணைத் தலைவரும் தைவான் நீரிணை இருகரை உறவுச் சங்கத்தின் துணைத் தலைவருமான Tang Shubei, இருகரை உறவின் மிக அருமையான தருணத்தையும் ஏற்றத்தாழ்வையும் நேரில் கண்டுள்ளார். இருகரை பரிமாற்றம் மற்றும் பேச்சுவார்த்தையின் முன்னணியில் நின்ற அவர், இந்தக் கால வரலாற்றை நேரில் கண்டவராகவும் அதில் பங்கெடுத்தவராகவும் திகழ்கிறார்.

ஷாங்காய் மாநகரில் பிறந்த Tang Shubei, ஒரு செய்தி நிறுவனத்தில் செய்தியாளராகவும், வானொலி நிலையத்தில் பதிப்பாசிரியராகவும் பத்து ஆண்டுகளுக்கு மேல் தூதாண்மை அதிகாரியாகவும் பணிபுரிந்தார். தனது வாழ்வின் எதிர்காலம் தைவானுடன் தொடர்புடையது என அப்போது அவர் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் அப்போதைய நினைவுகளை மீண்டும் புரட்டிப் பார்க்கையில், தைவானுக்கும் தனக்கும் இடையிலான முன்வினைத் தொடர்பு, ஜப்பானிலுள்ள சீனத் தூதரகத்தின் கன்சலேட்டு பிரிவுத் தலைவராக தாம் இருந்த போது ஏற்பட்டது என Tang Shubei கண்டறிந்தார். அப்போது அதாவது 1978ஆம் ஆண்டு, பொது மக்கள் சீனப் பெருநிலப்பகுதிக்குச் சென்று உற்றார் உறவினர்களைப் பார்ப்பதை தைவான் அதிகார வட்டாரம் கட்டுப்படுத்தியது. Tang Shubei கூறியதாவது—

"அப்போது தைவான் மக்கள் இடர்ப்பாட்டுடன் மறைமுகமாக சீனப் பெருநிலப்பகுதிக்கு வந்து உற்றார் உறவினர்களைப் பார்க்க வேண்டியிருந்தது. அவர்கள் ஜப்பானிலுள்ள சீனத் தூதரகத்துக்குச் சென்று சீனப் பெருநிலப்பகுதிக்குச் செல்லக் கூடிய சான்றுப் பத்திரத்துக்காக விண்ணப்பம் செய்தனர். நான் மறைமுகமாக அவர்களுக்கு சான்றுப் பத்திரங்களை வழங்கினேன்" என்றார் அவர்.

1 2 3 4