
1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நாள் ஒரே சீனா என்பது பற்றிய விளக்கத்தை தைவான் அதிகார வட்டாரம் வெளியிட்டது. "தைவான் நீரிணை இருகரைகளும் ஒரே சீனா என்ற கோட்பாட்டை கடைபிடிக்கின்றன. ஆனால் இருதரப்புகளும் இதற்கு வழங்கிய விளக்கம் வேறுபட்டது.""தைவான் சீனாவின் ஒரு பகுதியாகும். பெருநிலப்பகுதியும் சீனாவின் ஒரு பகுதியாகும்" என அது தெளிவாக தெரிவித்தது. இது பற்றி Tang Shubei கூறியதாவது—
"அப்போது ஒரே சீனா என்ற வார்த்தையைக் கண்ட பின், இந்த வார்த்தை இருப்பது போதும் என உணர்ந்தேன். ஒரே சீனா என்ற கோட்பாட்டின் பொருள் பற்றிய இருகரைகளின் புரிந்துணர்வுப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட முடியாது. ஆனால் அனைவரும் ஒரே சீனா என்று கூறினாலே போதும்" என்று அவர் கூறினார். 1 2 3 4
|