சர்வதேச நிதி நெருக்கடியால், பல நாடுகளின் பொருளாதாரம் மந்தமான நிலையில் சிக்கியுள்ளது. வேலை வாய்ப்பு நிலையும் மேலும் மோசமாகி, பல்வேறு துறைகளின் வளர்ச்சி பாதிக்கபப்ட்டுள்ளது. சில நாடுகளில் வர்த்தக தடைகள் தோன்றியுள்ளன. பல்வகை வர்த்தகப் பாதுகாப்புவாதங்கள், சீனாவின் ஏற்றுமதித் தொழில் நிறுவனங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
கடந்த 6 திங்களில், ஏற்றுமதி வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாகியுள்ளது. சொந்த உற்பத்திப் பொருட்களின் போட்டி ஆற்றல் குறையவில்லை. ஆனால், சில இறக்குமதி நாடுகளின் செயல்கள், அவர்களது வணிக நடவடிக்கைகளுக்கு பாதிப்பைக் கொண்டு வருகிறது என்று சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியும், சீனாவின் மிகப் பெரிய நெசவு இயங்திர தொழில் நிறுவனமான யின் யூ தொழில் குழுமத்தின் தலைமை இயக்குனருமான சாங் கொ லியங் கருத்து தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:
வர்த்தகப் பாதுகாப்புவாதப் பிரச்சினையை, எமது தொழில் துறை எதிர்நோக்கி வருகிறது. ஆகையால், கடந்த ஆண்டின் பிற்பாதியில், ஏற்றுமதி நடவடிக்கைகள் தெளிவாக பாதிக்கப்பட்டன. மாற்று விகிதம் உள்ளிட்ட காரணிகளால், பாதிப்புகள் ஏற்படுவதை புரிந்துகொள்ளலாம். ஆனால், வர்த்தகப் பாதுகாப்புவாதத்தால் தொழில் நிறுவனத்திற்கு ஏற்படும் பாதிப்பு நியாயமற்றது. சில நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வர்த்தகப் பாதுகாப்புவாதம் நிலவுவது உண்மைதான் என்று அவர் தெரிவித்தார்.
அதற்குப் பின், ஏற்றுமதி செய்யும் போது, இந்த தொழில் நிறுவனங்கள் மேலும் கவனத்துடன் செயல்படுகின்றன. சாங் மேலும் கூறியதாவது:
இத்தகைய பிரச்சினைகள் நிகழ்வதற்கு, நாங்கள் உரிய நேரத்தில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். அளிக்கின்றோம். உற்பத்திப் பொருட்களின் தகவல்களையும் ஆவணங்களையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்து, தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் பாடுபடுகின்றோம் என்றார் அவர்.
1 2 3 4
|