உற்பத்திப் பொருட்களின் போட்டியாற்றலை தொடர்ந்து அதிகரிப்பதோடு, ஏற்றுமதித் துறையில் சீனா மேலதிகமான இன்னல்களை எதிர்நோக்குகின்றது. உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறையும் போது, வர்த்தகப் பாதுகாப்புவாதம் சீனாவுக்கு தீங்கு விளைவிக்கும். அண்மையில், சீனாவின் உருக்குச் சுருள், இயந்திர உதிரி பாகங்கள், விளையாட்டுப் பொம்மைகள் ஆகியவை மீது, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள், பொருள் குவிப்பு விற்பனைக்கு எதிரான வரி வசூலிப்பை மேற்கொண்டன.
தவிர, தொழில் நுட்ப வரையறையை உயர்த்துவதன் மூலம், சீனாவின் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதை சில நாடுகள் தடுக்க முயற்சிக்கின்றன. எனவே, உற்பத்திப் பொருட்களின் தரத்தை சீனத் தொழில் நிறுவனங்கள் இடைவிடாமல் மேம்படுத்தி, வெளிநாட்டுத் தேவைகளை முழுமூச்சுடன் நிறைவு செய்யும்.
வர்த்தகப் பாதுகாப்புவாதத்தைத் தடுக்கா விட்டால், உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்று சீன அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினரும், சீன அரசவையைச் சேர்ந்த வளர்ச்சி ஆய்வகத்தின் வெளிநாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் தலைவருமான சாங் சியொ ஜி தெரிவித்தார். இது பற்றி, அவர் கூறியதாவது
வர்த்தகப் பாதுகாப்புவாதத்தைத் தடுத்துக் கட்டுப்படுத்தாமல் இருந்தால், அது உலகளவில் பரவலாகும். சீனத் தொழில் நிறுவனங்கள் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளும் இதனால் பாதிக்கப்படும். எனவே, வர்த்தகப் பாதுகாப்புவாதத்தை அனைவரும் எதிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
1 2 3 4
|