• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-14 10:02:19    
கல்லீரல் பாதுகாப்பு திட்டம்

cri

அதிக சிகிச்சை கட்டணம், கல்லீரல் நோய் தடுப்பு பற்றிய சரியான கருத்து மற்றும் சரியான சிகிச்சை பற்றாகுறை, பல்வேறு இடங்களில் சமநிலையில் இல்லாத சிகிச்சை தரம், முதலியவை சீனாவில் கல்லீரல் நோய் தடுப்புப் பணியில் தோன்றிய முக்கிய பிரச்சினைகளாகும். ஆனால், பரிசோதனை கருவி, சிகிச்சை மருந்து, தலைசிறந்த மருத்துவ நிபுணர் ஆகிய துறைகளில், சீனாவின் கல்லீரல் சிகிச்சை தரம் உலகில் முன்னணியில் உள்ளது. இந்த நிலைமையில் தான், கல்லீரல் பாதுகாப்பு திட்டம் வெளியிடப்பட்டது. சீனக் கல்லீரல் நோய் தடுப்பு நிதியத்தைச் சேர்ந்த wang zhao அம்மையார் கூறியதாவது

சீனாவில் பொது மக்களிடையில் கல்லீரல் தடுப்பு அறிவு குறைவானது. கல்லீரல் நோயாளிகளின் சிகிச்சை அறிவு குறைவானது. சிகிச்சை வழிமுறைகளை உடனடியாக ஒழுங்கிணைத்து, பயன் தரும் தடுப்பு, உரிய சிகிச்சை உள்ளிட்ட அறிவியல் ரீதியான அறிவுகளை பரவல் செய்ய வேண்டும். கல்லீரல் நோய் மீதான கவனத்தை ஈர்த்து, நோயாளிகளை சரியான முறையில் சிகிச்சை பெற்ற செய்து, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது என்பது கல்லீரல் பாதுகாப்பு திட்டத்தின் நோக்கமாகும் என்றார் அவர்.

1 2 3 4