• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-14 10:02:19    
கல்லீரல் பாதுகாப்பு திட்டம்

cri

நோயாளிகளுக்கு நிதியுதவி தகவல் சேவை, பரிமாற்ற மேசை ஆகியவற்றை வழங்குவது இத்திட்டத்தில் அடங்குகின்றது என்று சீன கல்லீரல் பாதுகாப்பு இணையத்தளத்தின் முதன்மை நிர்வாகி யாங் யுங் கூறினார். நோயாளிகளுக்கான நிதியுதவி பற்றி அவர் கூறியதாவது

திட்டப் படி, அடுத்த 20 ஆண்டுகளில், விண்ணப்பம் செய்த கல்லீரல் நோயாளிகளின் நோய் வகை, குடும்ப வருமானம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட வரையறையின் படி, திங்கள்தோறும் சுமார் 500 நோயாளிகளைத் தேர்தெடுத்து, அவர்களுக்கு 100 முதல் 300 யுவான் வரையான சிகிச்சை உதவியை வழங்குகின்றோம். தொடர்புடைய மருத்துவர்கள், சிகிச்சை போக்கில் சந்திக்கும் பிரச்சினை, அன்றாட வாழ்க்கை மற்றும் உளவியல் பிரச்சினை முதலியவை குறித்து அவர்களுக்கு பன்முகமாக சிறப்பு தொழிலான ஆலோசனை வழங்குவர். மருத்துவமனை தரப்பு பரிந்துரை செய்யப்பட்ட சில கடும் நோய்வாய்ப்பட்டவர்களும் பொருளாதார இன்னலுக்குள்ளாகிய நோயாளிகளும் இலவச சிகிச்சை அளிக்கப்படும். கல்லீரல் நிதியம், எமது கல்லீரல் பாதுகாப்பு இணையத்தளம், மருத்துவமனை ஆகியவை சிகிச்சை கட்டணத்தைக் கூட்டாக ஏற்படுத்தும் என்றார் அவர்.

2008ம் ஆண்டு அக்டோபர் முதல் நாள், சீனாவின் 17 மாநிலங்கள் மற்றும் மாநகரங்களைச் 20 நோயாளிகள் முதல் தொகுதி நிதியுதவியை பெற்றனர். வடக்கிழக்கு சீனாவிலுள்ள லியோ நிங் மாநிலத்தைச் சேர்ந்த wei de shan என்பவர் அவர்களில் ஒருவராவர். இத்திட்டத்தின் நிதியுதவி, கல்லீரல் புற்று நோய் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட அவருக்கு விருப்பம் கொண்டு வந்துள்ளது என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது

கல்லீரல் நோய் கடும் நோய்களில் ஒன்றாகும். சிகிச்சை கட்டணம் அதிகமானது. இத்திட்டம் மூலம், நிதியுதவி பெற்றேன். மேலும் உதவி தொகை கிடைத்த போது, மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சமூகத்தில் அன்பு உடையவர்கள் உள்ளனர். அதன் மூலம், விருப்பத்தை எழுப்பினேன். சமூகத்திலிருந்து அன்பு உண்ர்ந்தேன் என்றார் அவர்.

1 2 3 4