• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-14 10:02:19    
கல்லீரல் பாதுகாப்பு திட்டம்

cri

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் 20 ஆண்டு காலத்தில், சுமார் ஒரு இலட்சம் மக்கள் நன்மை பெற முடியும். தவிர, சீனாவில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள சுமார் 100 மருத்துவமனைகள் உடன்படிக்கையின் மூலம் இத்திட்டத்தில் சேர்க்க விரும்புவதாகவும் யாங் யுங் தெரிவித்தார்.

சீன மக்கள் விடுதலை படையின் 302 இலக்க மருத்துவமனை உடன்படிக்கையின் மூலம் இத்திட்டத்தில் சேர்ந்த முதலாவது மருத்துவமனையாகும். சீனாவில் புகழ்பெற்ற தொற்று நோய் சிகிச்சை மருத்துவமனைகளிலும் சீனக் கல்லீரல் நோய் சிகிச்சை தரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைசிறந்த மருத்துவமனைகளிலும் இது ஒன்றாகும். இதுவரை, இந்த மருத்துவமனை 180 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அளித்துள்ளது. வெற்றி விகிதம் 100 விழுக்காட்டை எட்டியுள்ளது. இம்மருத்துவமனையின் இயக்குநர் முனைவர் Zhou xian zhi கூறியதாவது

சீனப் படைக்கு மக்களுக்குச் சேவைப் புரியும் நல்ல பாரம்பரியம் உண்டு. இந்நடவடிக்கையில் பங்கெடுத்துள்ளோம். கடமையை நிறைவேற்ற பொறுப்பையும் ஆற்றலையும் கொண்டுள்ளோம் என்றார் அவர்.

சீனா ஒரு பெரிய நாடாகும். 20 ஆண்டு கால முயற்சி மூலம், நோயாளிகளுக்கு நிதியுதவி அளிக்கும் அதேவேளையில், கல்லீரல் நோய் பற்றிய பொது மக்களின் கருத்தை உயர்த்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.


1 2 3 4