லாசா துவக்கப்பள்ளிக்கு, திபெத் சமூகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. பெயரைப் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 300க்கு மேலாகும். திபெத் இன மாணவர்கள் இதில் 90விழுக்காட்டுக்கு மேல் வகித்தனர். பிரபுக்கள், வணிகர்கள், நகரவாசி மக்கள், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குழந்தைகள் அவர்களில் இடம்பெற்றனர்.
இத்துவக்கப்ள்ளியில், அறிவியில் தொழில் நுட்ப பாடங்களை ஆசிரியர்கள் திபெத் மொழியில் கற்றுக்கொடுத்தனர். கலகலப்பான கல்வி வடிவத்தால், பல்வேறு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஈர்க்கப்பட்டனர். திபெத் மொழி, கணிதவியல், இயற்கை பொது அறிவு, அரசியல், இசை, நுண்கலை, விளையாட்டு ஆகிய பாடங்கள் துவங்கப்பட்டன. மேலும், ஓய்வு நேர ஆடல் பாடல் அணியை மாணவர்கள் உருவாக்கி, முக்கிய விழாக்களை கொண்டாடும் அரங்கேற்றங்களில் பங்கெடுத்தனர். இத்தகைய கல்வி வழிமுறை, பழைய திபெத்தின் எந்த பள்ளிகளாலும் ஈடுகொடுக்க முடியாததாகும். எனவே, பல தனியார் பள்ளிகளின் மாணவர்கள் படிப்படியாக இத்துவக்கப்பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றனர். இத்துவக்கப்பள்ளி நிறுவப்பட்டுவதற்கு முன், திபெத்தின் சில உயர் குடி மக்களும் வணிகர்களும் தங்களது குழந்தைகளை கல்வி பயில இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். இத்துவக்கப்பள்ளி நிறுவப்பட்ட சிறிது காலத்திற்குப் பின், அவர்கள் பெரும்பாலானவர்கள் தங்களது குழந்தைகளை திபெத்துக்கு திரும்பி அழைத்து, அவர்களை லாசா துவக்கப்பள்ளியில் சேர்த்தனர்.
1 2 3 4
|