
லாசா துவக்கப்பள்ளி வெற்றிகரமாக நிறுவப்பட்ட அனுபவம், பல்வேறு துறைகளின் கவனத்தை ஈர்த்தது. திபெத் கல்வியின் நவீன வளர்ச்சியை முன்னேற்ற இது முக்கிய பங்காற்றியது. இத்துவக்கப்பள்ளி நிறுவப்பட்டதற்கு பிந்தைய சில ஆண்டுகளுக்கு பின், திபெத்தின் ஷிகாசே, கியாங்சே, லோகா, நிங்ச்சி முதலிய இடங்களில் ஒரு தொகுதி புதிய ரக துவக்கப்பள்ளிகள் நிறுவப்பட்டன. 1959ம் ஆண்டின் இறுதி வரை, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் அரசால் உருவாக்கப்பட்ட துவக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 133 ஆக இருந்தது. மாணவர்களின் எண்ணிக்கை 2600க்கு மேல் தாண்டியது.
கடந்த நூற்றாண்டின் 50ம் ஆண்டுகள் முதல், பல்வகை புதிய ரக பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும் சுறுசுறுப்பாக நிறுவப்பட்டன.
1 2 3 4
|