துவக்கத்தில் திபெத்தின் பல்வேறு இடங்களிலும் அரசால் நிறுவப்பட்ட துவக்கப்பள்ளிகள், முன் மாதிரித் துவக்கப்பள்ளிகளாக மாறின. அதற்கு பின், அரசு சாரா துவக்கப்பள்ளிகளும் விரைவாக வளர்ந்தன. 1959ம் ஆண்டில் மட்டும், திபெத்தில் உருவாக்கப்பட்ட அரசு சாரா துவக்கப்புள்ளிகளின் எண்ணிக்கை 450 ஆகும். பரந்த வேளாண் மற்றும் மேய்ச்சல் பிரதேசங்களில், இளம் வயதினர் மற்றும் வயதுவந்தோருக்கான கல்வியை மேலும் மேம்படுத்த, 6முதல் 16வயது வரையான இளைஞர்களும் அரசு சாரா துவக்கப்பள்ளிகளில் சேர அனுமதிக்கப்பட்டது. வேலை அதிகமில்லாத ஓய்வு நேரம் அதிகமாக உள்ள காலத்தில், கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம், மும்முரமான காலத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் குறைவு ஆகிய கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
நேயர்களே இத்துடன், இன்றைய சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சி நிறைவடைகின்றது. மேலதிக தகவர்கள் அடுத்த வாரத்தில் இடம்பெறும். மீண்டும் அடுத்த திங்கட்கிழமை சந்திப்போம். வணக்கம் 1 2 3 4
|