தைவான் உடன்பிறப்புகளுக்கான அறிக்கையை சீன தேசிய மக்கள் பேரவை நிரந்த கமிட்டி வெளியிட்ட கடந்த 30 ஆண்டுகளில், தைவான் நீரிணை இரு கரை உறவில், தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தைவான் பழங்கள் சீன பெருநிலப்பகுதி சந்தையில் நுழைந்தது, இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். பெருநிலப்பகுதியில் தைவான் பழங்களை விற்பனை செய்த முதல்நபர் ஹூவங் யீ ச்சுங், இந்த இரு கரை உறவின் மேம்பாட்டிற்கு சாட்சியாவார். இன்றைய நிகழ்ச்சியில், பெருநிலப்பகுதியில் வணிகம் செய்கின்ற அவரை பற்றி அறிமுகப்படுத்துகிறோம். இரு கரை அமைதி, மக்களுக்கு கொண்டு வருகின்ற நலன்களை கூட்டாக அறிவோம்.
தென்கிழக்கு சீனாவின் ஷியா மன் நகரில், குவங் யீ ச்சோ 500 சதுர மீட்டர் பரப்பளவுடைய கடைகளைக் கொண்டிருக்கிறார். பெருநிலப்பகுதியில் தைவான் பழங்களை விற்பனை செய்த 3 ஆண்டுகளில் அவர் நாடு முழுவதும் 18 சிறப்புக் கடைகளைத் துவக்கினார். பழங்களின் விற்பனை அளவு, துவக்கத்தில் இருந்த 12 டன்னிலிருந்து தற்போதைய ஆயிரம் டன்னுக்கு மேலாக அதிகரித்துள்ளது. சீன பெருநிலப்பகுதி தைவான் வணிகர்களுக்கு வழங்கிய பயனுள்ள கொள்கைகள் தான், அவரது வளர்ச்சிக்கு காரணமாகும் என்று குவங் யீ ச்சோங் கூறினார்.
1 2 3 4
|