முன்பு, அரசியல் காரணங்களால் தைவான் பழங்கள், ஹாங்காங் முனையம் மூலம் பெருநிலப்பகுதிக்கு அனுப்பப்பட வேண்டியிருந்தது என்று ஹூவங் யீ ச்சோங் நினைவு கூர்ந்தார். அதிக போக்குவரத்து செலவு மற்றும் அதிக போக்குவரத்து காலத்தினால், தைவான் பழங்களின் விலைவாசி உயரமாக இருந்தது. இதனால் விற்பனை, பெரிதும் பாதிக்கப்பட்டது. இரு கரை உறவின் மேம்பாட்டுடன், கடந்த ஆண்டின் டிசம்பர் திங்களில், இரு கரைகளுக்கிடையில் நேரடி அஞ்சல், விமானம் மற்றும் வணிகம் நனவாகின. தைவான் பழங்கள், நேரடியாக பெருநிலப்பகுதிக்கு அனுப்பப்படுவதால் விலைவாசி குறைந்துள்ளது. ஹூவாங் யீ சோங் கூறியதாவது,
பழங்களை கொள்கலன்களில் வைத்து தைவானிலிருந்து ஷியா மன் நகருக்கு அனுப்புவது, சுமார் 10 மணி நேரம் தான் ஆகிறது. தற்போது பழங்களின் விலைவாசி, 2005ம் ஆண்டில் இருந்ததை விட பாதியாக குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.
இரு கரைகளுக்கிடை வர்த்தகப் பரிமாற்றத்தின் ஆழமாக்கப்பட்டதால், தற்போது, ஹூவங் யீ ச்சோங்கின் பழ வணிகம் மேன்மேலும் சீராக மாறியுள்ளது. பெருநிலப்பகுதியில் அவர் 18 சிறப்புக் கடைகளை நடத்துகின்றார். அவர் தைவான் பழ விற்பனையின் மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை அவர் எதிர்நோக்குகின்றார். அவர் மேலும் கூறியதாவது,
தற்போது, நாட்டின் 300 நகரங்களில் சிறப்புக் கடைகளை துவக்க ஆயத்தமாகி இருக்கின்றேன். இத்தொழிலுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இவ்வாண்டின் விற்பனை அளவு 1500 டன் அல்லது 2000 டன்னை எட்டும் என்று ஹூவாங் யீ ச்சோங் கூறினார்.
ஹூவங் யீ ச்சோங்கின் பழ வணிகம் நாளுக்கு நாள் வளர நல்வாழ்த்துக்கள். தைவான் நீரிணை இரு கரை உறவிலும் மேலும் அதிக மேம்பாட்டையும் எதிர்பார்க்கிறோம். 1 2 3 4
|