துவக்கக் காலகட்டத்தின் முயற்சியில், குவங் யீ ச்சோங்கு லாபம் கிடைக்கவில்லை. முதலில் கொள்கலனிலான பழங்கள் மூன்றில் இரண்டு பகுதி கெட்டுப்போயின. அவருக்கு பெரிய இழப்பு ஏற்பட்டது. இந்த வணிகத்தை உடனடியாக கைவிட வேண்டுமென அவரது ஊழியர்கள் அவருக்கு அறிவுரை கூறினர். ஆனால், ஹூவங் யீ ச்சோங் உணர்வுப்பூர்வமாக இதை கருதில் கொண்டு, தொடர்ந்து பெருநிலப்பகுதியில் வணிக செய்ய தீர்மானித்தார். அவர் கூறியதாவது,
நாங்கள் தோல்வியடைந்தற்கான காரணங்களைத் தொகுத்தோம். முயற்சியை நான் கைவிடாமல், எனது வியாபாரம் வளர்ச்சி பெறுவது திண்ணம் என்று குவங் யீ ச்சோங் கூறினார்.
அவரது இடைவிடாத முயற்சி மூலம், நாட்டின் பல்வேறு இடங்களின் நுகர்வோர் தைவான் பழச் சின்னத்தை ஏற்றுக்கொண்டு விரும்ப துவங்கினர். தைவான் பழங்கள் மீதான நம்பிக்கை, பெருநிலப்பகுதி சந்தையின் நல்ல எதிர்காலம் ஆகியவற்றால் ஹூவாங் யீ ச்சோங் சிக்கல்களைப் பொருட்படுத்தாமல் இந்த வணிகத்தை உறுதியோடு மேற்கொண்டார். மேலும், இரு கரை உறவின் வளர்ச்சி மீதும் அவருக்கு நிறைந்த நம்பிக்கை இருந்தது. இது குறித்து ஹூவங் யீ சோங் மேலும் கூறியதாவது,
சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகத்தின் முன்னாள் தலைவர் chen yunlin சியா மன் நகரைப் பார்வையிட்ட பின், இங்கு தைவான பழ விற்பனை மையத்தை உருவாக்க அறிவித்தார். அனைத்து தைவான் வணிகர்களின் வாடகையை விலக்குவதை அவர் போவதை அறிவித்தார். பிறகு, உள்ளூர் அரசு, முன்னுரிமையுடைய பல கொள்கைகளை வெளியிட்டது. புதிதாக கட்டியமைக்கப்பட்ட சந்தையில் வணிகர்களின் அரை ஆண்டு வாடகையையும் சியா மன் வர்த்தக மற்றும் வளர்ச்சிப் பணியகம் விலக்கியது. இரு கரை பொருளாதார மற்றும் வர்த்தக கருத்தரங்கில், தைவான் விவசாயிகளுக்கான 15 சாதகமான் கொள்கைகளும் வெளியிடப்பட்டன. இவற்றின் மூலம், தைவான் விவசாயிகள் மீது அரசு காட்டிய கவனத்தை அறியலாம். நாங்கள் எந்த கவலையுமின்ற நிதானமாக பழ விற்பனையை செய்ய முடிந்தது என்று அவர் கூறினார்.
1 2 3 4
|