 நண்பர்களே, 30 ஆண்டுகளுக்கு முன், சாதாரண சீன மக்களைப் பொறுத்த வரை, வெளிநாடுகளில் கல்வியறிவு பெறுவது ஒரு கனவு போல் இருந்தது. கொள்கை, அந்நிய மொழி அறிவு, பொருளாதாரம் முதலிய காரணங்களால், இக்கனவு நிறைவேறுவதற்கு மிகவும் கடினமாக இருந்தது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுப் பணி மேற்கொள்ளப்பட்ட கடந்த 30 ஆண்டுகளில், சீனாவின் சமூகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ந்ததுடன், உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று கல்வி பெறுவதன் வேகமும் அதிகரித்து வருகின்றது. தற்போது, வெளிநாடுகளில் கல்வியறிவு பெறுவது சாதாரண விடயமாகும். பல வெளிநாட்டு மாணவர்கள் சீனாவுக்கு வந்து பயின்று வருகின்றனர்.
Zhu zi juan என்ற பெண், ஜெர்மன் Goethe கழகத்தின் பெய்ஜிங் கிளைவில் பணி புரிகின்றார். 1999ம் ஆண்டு, பல்கலைக்கழக படிப்பை முடித்துவிட்டு 3 ஆண்டுகளாக ஆசிரியராக பணி புரிந்த அவர், ஜெர்மனிக்குச் சென்று பயில முடிவு செய்தார். Stuttgart பல்கலைக்கழகத்தில் அவர் புகழ்பெற்ற ஆசிரியரிடமிருந்து graphic design எனப்படும் வரைகலை வடிவமைப்பு பயின்றார். அவர் வேறு பண்பாட்டு சூழ்நிலையில் கல்வியறிவு பெறும் இன்பத்தை அனுபவிக்கும் அதேவேளையில், பல நாடுகளில் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள 4 ஆண்டு கால கல்வி அனுபவம் மூலம் தனது வாழ்க்கையை மீண்டும் சரிப்படுத்தியதாக அவர் கூறினார். Zhu zi juan அம்மையார் கூறியதாவது
வெளிநாடுகளில் கல்வியறிவு பயின்ற அனுபவம் எனக்கு புதிய வாய்ப்பை வழங்கியது. இதர நாடுகளில் பயணம் செய்து வேறுபட்ட பார்வைகளில் உலகை மதிப்பிடும் வாய்ப்புகளை பெற்றுள்ளேன். என்னைத் தானே மீண்டும் மதிப்பிட்டேன். பல்வகை சூழ்நிலைகளை அனுபவித்தேன். குறிப்பாக சர்மனிக்கும் சீனாவுக்குமிடையிலான பண்பாட்டு வேறுப்பாட்டு ஒப்பிட்டு அறிந்து கொண்டேன் என்றார் அவர்.
1 2 3 4
|