
வெளிநாடுகளில் பயின்று நாடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை எட்டியது. சீனாவின் நவீனக்கட்டுமானத்தில் அவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். அது மட்டுமல்ல, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையின் நடைமுறையாக்கத்துடன் மென்மேலும் அதிகமான வெளிநாட்டவர்கள் சீனாவின் உயர்வேக பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பான வரலாற்று பண்பாடுகளால் ஈர்க்கப்பட்டு சீனாவுக்கு வந்து கல்வி பயின்று வருகின்றனர்.
இளைஞர் Vikash Kumar Singh இந்தியாவைச் சேர்ந்தவர். தற்போது சீன மக்கள் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மாணவராகப் அவர் பயில்கின்றார். மேநிலை பள்ளியில் பயின்ற போது, எதேச்சையாக சீன எழுத்துக்களை அவர் கண்டார். அப்போது முதல் அவர் சீனப் பண்பாட்டின் மீது ஆர்வம் காட்டினார். Jawahalal Nehru பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின், சீனாவில் ஓராண்டு கல்வியறவு பெறும் வாய்ப்பை அவர் பெற்றார். அவர் கூறியதாவது
பாரம்பரிய சீனப் பண்பாட்டின் மீது ஆர்வம் கொண்டுள்ளேன். சீனத் தேயிலை மற்றும் மது பண்பாடு, வசந்த விழா, டிராகன் கப்பல் ஓட்ட விழா உள்ளிட்ட பல விழாக்கள் மிக சுவையானவை. சீனாவில் முழுவதுமாகத் தங்கியிருக்கவே விரும்புகிறேன் என்றார் அவர்.
இத்தகைய கருத்துடன், அவர் சீன மக்கள் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவு கல்லூரியில் பட்டப்படிப்பு மாணவராக மாறினார். சீன அரசு வழங்கும் கல்வி உதவி தொகையை பெற்றார். தற்போது, அவர் மகிழ்ச்சியுடன் சீனாவில் பயின்று வருகின்றார்.
1 2 3 4
|