
1978ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையான 30 ஆண்டுகளில், மொத்தம், 12 இலட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் சீனாவில் கல்வி பயின்றனர். 2007ம் ஆண்டில் சுமார் 2 இலட்சம் வெளிநாட்டு மாணவர்கள் சீனாவில் பயின்றனர். சீனக் கல்வித் துறையின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்ற பிரிவின் அதிகாரி zhao ling shan கூறியதாவது
சீனா மென்மேலும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களை ஈர்த்துள்ளது. 2007ம் ஆண்டு 188 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் சீனாவில் கல்வி பயின்றனர். தற்போது, சீனாவிலுள்ள 500க்கும் அதிகமான கல்லூரிகள், கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும், இதர கல்வி நிலையங்களிலும் வெளிநாட்டு மாணவர்கள் உள்ளனர் என்றார் அவர்.
தற்போது சீனாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் முக்கியமாக அண்டை நாடுகள் மற்றும் ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவராவர். சீன மொழியை மட்டும் கற்றுக்கொள்வது அவர்களின் ஆர்வத்தை நிறைவு செய்ய முடியாது. சீனாவின் மேம்பாட்டுடைய துறைகளிலும் பட்டம் பெறுவதில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். Zhao ling shan மேலும் கூறியதாவது
இதுவரை, 33 நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் பரஸ்பரம் உயர் கல்வி பட்டங்களை ஏற்றுக்கொள்ளும் உடன்படிக்கைகளை சீனா ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் சீனாவில் பயின்று நாடு திரும்பிய பின் வேலை வாய்ப்பு பெறுவதற்கு இது வசதி வழங்கும். தவிர, சீனாவிலான கல்வி கட்டணம் ஒப்பீட்டளவில் மலிவானது என்றார் அவர்.
முழுமை பெறாத புள்ளிவிபரங்களின் படி, சீனாவில் கல்வி பயின்று பட்டம் பெற்ற வெளிநாட்டு மாணவர்களில் 30க்கு அதிகமானோர் த்த்தமது நாட்டின் அமைச்சர் நிலை பதவிகளை ஏற்றனர். 20க்கு அதிகமானோர் தத்தம் நாடுகளின் சீனாவுக்கான தூதர்களாகப் பணி புரிந்தனர். 1 2 3 4
|