
தற்போது நாடுகளுக்கிடை பண்பாட்டுப் பரிமாற்றம் தொடர்பான பணியில் அவர் ஈடுபடுகின்றார். வெளிநாடுகளில் பெற்ற அனுபவங்களுடன், அவர் சிறப்பாக பணி புரிகின்றார்.
கடந்த சில ஆணடுகளில், zhu zi juan போன்ற வெளிநாடுகளில் கல்வியறவு பெற்ற சீனர்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது. இது குறித்து, சீனாவுக்கான ஜெர்மன் தூதர் Michael Schaefer கூறியதாவது
தற்போது சுமார் 30 ஆயிரம் சீன மாணவர்கள் ஜெர்மனியின் பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர். இவ்வெண்ணிக்கை அதிகரிக்கத் தொடரும். ஜெர்மனியில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் சீனர்களின் எண்ணிக்கை, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளை விட அதிகமானது என்றார் அவர்.
சீனக் கல்வி துறை அமைச்சின் சர்வதேச பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புப் பிரிவின் தலைவர் zhang xiu qin அம்மையார் கூறியதாவது
1978ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டின் இறுதி வரை, வெளிநாடுகளில் பயின்ற சீன மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. 100க்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அவர்கள் பயின்று வருகின்றனர் என்றார் அவர்.
1 2 3 4
|