இந்த இலக்கை நனவாக்க வேண்டுமானால், அதிக எரியாற்றல் செலவு மற்றும் கடும் மாசுபாட்டைக் கொள்கின்ற தொழில்நிறுவனங்களை கட்டுப்படுத்தி விலக்க வேண்டும். Chengde நகரம், உயிரின சுற்றுசூழல் வரையறையின்படி, பொருளாதாரத்தின் வளர்ச்சி முறையை சரிபடுத்தி திட்டமிடுகிறது. நவீன சுற்றுலா தொழில், தூய்மையான எரியாற்றல், சிறப்பு மிக்க வேளாண்துறை ஆகியவற்றை முக்கியமாக கொள்கின்ற புதிய தொழில் நிலைமை உருவாகியுள்ளது. இந்த நகரில் மாசுபாட்டை அதிகமாக வெளியேற்றுகின்ற 146 தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டன. எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சி வலுப்பட்டுள்ளது. இது மற்றி chengde மாநகராட்சி தலைவர் ச்சாங் கு ச்சியங் கூறியதாவது,
அரசின் சாதனையை மதிப்பிடுகின்ற வரையறைகளில், உள்நாட்டு உற்பத்தி மதிப்புக்குப் பதிலாக, உயிரின சுற்றுச்சூழல் தான் முதலிடம் வகிக்கிறது. இதன் மூலம், 2010ம் ஆண்டு வரை, முக்கிய மாசுபாட்டுப் பொருட்களின் வெளியேற்றம் 2005ம் ஆண்டில் இருந்ததை விட, சுமார் 16 விழுக்காடு குறையும் என்பது உறுதிப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
1 2 3 4
|