தவிரவும், chengde நகரம், சுற்றுச்சூழலை மேம்படுத்த, எரியாற்றல் கட்டுக்கோப்பை மேலும் சரிப்படுத்தியது. தற்போது, காற்று திறன், நீர் மின்சாரம் முதலிய தூய்மை எரியாற்றல், முக்கிய எரியாற்றலாக மாறியுள்ளது. இந்த நகரத்தில் நிறைந்த காற்று ஆற்றலுடையது. இதுவரை, இங்குள்ள பல தொழில் நிறுவனங்கள் பெரியளவில் காற்று ஆற்றலை வளர்த்து வருகின்றன. இங்குள்ள காற்று ஆற்றல் மின்சார உற்பத்தி தளத்திற்கான திட்டம் ஒப்புதல் பெற்றுள்ளது என்று சாங் கு ச்சியங் தெரிவித்தார்.
இதைத் தவிர, நீர் மின்சாரம், சூரியன் ஆற்றல் வளம், அனல் வெப்ப மூலவளம், மீத்தேன் வாயு முதலிய புதிய எரியாற்றலின் வளர்ச்சியில் chengde நகரம் பெரிய முன்னேற்றம் பெற்று, மேலும் பெரிய திட்டங்களை வகுத்துள்ளது.
2010ம் ஆண்டில் மின்சார உற்பத்தி சாதனங்களின் மொத்த ஆற்றலை 30 இலட்சம் கிலோவாட்டாக உயர்த்த பாடுபடுவோம். 2015ம் ஆண்டு இந்த எண்ணிக்கை, ஒரு கோடி கிலோவாட்டாக உயர்த்த பாடுபடுவோம். Chengde நகரத்தை பெய்ஜிங்கான மிக பெரிய தூய்மை எரியாற்றல் தளத்தாக கட்டியமைக்கத் திட்டமிடுகிறோம் என்று சாங் கு சியாங் கூறினார். 1 2 3 4
|