 பாரம்பரிய திபெத் மருந்து 2300 ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடையது. சீனத் தேசிய இன மருத்துவத் துறையில் இது செல்வாக்கு மிக்க பகுதியாகும். நீண்டகால வளர்ச்சி போக்கில், தீரா நோய்கள், அடிக்கடி ஏற்படவல்ல நோய்கள், கடும் நோய்கள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் இது முக்கிய பங்காற்றியுள்ளது. தற்போது, நவீன அறிவியல் தொழில் நுட்பம் மூலம், பழமையான திபெத் மருந்துகள் வேகமாக வளர்ச்சி அடைந்து, மேலும் பரந்த அளவிலான சர்வதேச சந்தைக்குள் நுழைந்துள்ளன.
திபெத் மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் முக்கியமாக கடல் மட்டத்திலிருந்து 3800 மீட்டர் உயரமான மிகவும் குளிரான இடங்களில் கிடைக்கின்றன. புள்ளிவிபரங்களின் படி, சிங்காய் திபெத் பீடபூமியில் சுமார் 2000க்கும் அதிகமான தாவரங்களும், 160 விலங்குகளும், 80 வகை தாதுப் பொருட்களும் இத்தகைய மருந்துகளில் பயன்படுத்தப்படலாம். இந்தத் துறையில் உலகில் வேறு எந்த ஒரு தேசிய இன மருந்துகளும் திபெத் மருந்துகளுடன் ஒப்பிடப்பட முடியாதவை.
1 2 3 4
|