• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-28 09:13:35    
திபெத் மருந்தின் நவீனமயமாக்கத்தை விரைவுப்படுத்துவது

cri

மேலும், திபெத் மருந்து தயாரிப்புத் துறையின் வளர்ச்சிக்கும், மருந்துக்கான மூலப்பொருள் பற்றாக்குறைக்கும் இடையிலான முரண்பாட்டைச் சமாளிக்கும் வகையில், திபெத் அரசும், திபெத் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், அறிவியல் ஆய்வகங்களும் திபெத் மருந்து மூலப்பொருளை பயிரிடுதல் மற்றும் ஆய்வுப் பணிகளை வலுப்படுத்தியுள்ளன. திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் அறிவியல் தொழில் நுட்ப ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் TsedimGyaco கூறியதாவது

2006 முதல் 2010ம் ஆண்டு வரையான 5 ஆண்டுகளில், 200 திபெத் மருந்து வகைகள் பற்றி தொடர்புடைய தேசிய நிலை வரையறையை வகுக்க உள்ளூர் அரசு திட்டமிட்டுள்ளது. தவிர, அழிவு விளிம்பில் உள்ள திபெத் மருந்துகளை செயற்கையான வழிமுறைகள் மூலம் பயிரிடும் பணியையும் வலுப்படுத்தினோம் என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளாக, திபெத் மருத்துவம் மற்றும் மருந்து பற்றிய ஆய்வும் படிப்படியாக ஆழமாகி வருகின்றது. சுமார் 100 படைப்புகள் தொகுக்கப்பட்டன. சீன மருத்துவ களஞ்சியத்தைச் சேர்ந்த திபெத் தொகுதி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் தேசிய நிலை அறிவியல் தொழில் நுட்ப ஆய்வு திட்டப்பணிகளில் சேர்க்கப்பட்டன. அமெரி்க்காவின் கொலோராடோ பல்கலைக்கழகம் திபெத் மருத்துவமனையுடன் ஒத்துழைத்து, திபெத் மருத்துவம் மற்றும் மருந்து மூலம் பீடபூமி பகுதிகளிலான நோய்களுக்கு சிகிச்சை அளி்ப்பது பற்றி ஆய்வு மேற்கொண்டது. 4 தொகுதிகளைக் கொண்ட திபெத் மருத்துவ படைப்பு, ஆங்கிலம், பிரான்ஸ், ரஷியா, ஜப்பான் முதலிய பல மொழிகளில் வெளியிடப்பட்டது.

உற்பத்தி தொழில் நுட்பத்தின் அறிவியல் மயமாக்கம், வரையறை மயமாக்கம் முதலியவற்றுடன், மென்மேலும் அதிகமான திபெத் மருந்துகள் நோயாளிகள் மற்றும் நுகர்வோரின் வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது, திபெத்திலுள்ள பல்வேறு இடங்களில் திபெத் மருத்துவமனைகளும் திபெத் மருத்துவ பிரிவுகளும் அடுத்தடுத்து நிறுவப்பட்டு வருகின்றன. திபெத் தவிரத்த 10க்கும் அதிகமான நகரங்களில் திபெத் மருத்துவ நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. Rhodiola, Cheezheng ஆகிய 2 வகை திபெத் மருந்துகள் 26வது ஜெனிவா சர்வதேச கண்டுப்பிடிப்பு மற்றும் புதிய தொழில் நுட்ப கண்காட்சியில் சர்வதேச கண்டுப்பிடிப்புக்கான தங்க பதக்கத்தை பெற்று, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 20க்கு அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் சந்தைகளுக்குள் நுழைந்துள்ளன.

1 2 3 4