• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-28 09:13:35    
திபெத் மருந்தின் நவீனமயமாக்கத்தை விரைவுப்படுத்துவது

cri

ஆயிரம் ஆண்டுகளாக, பாரம்பரிய திபெத் மருந்துகள் கைவினை தொழில் நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்டன. மூலவளங்கள் நேரடியாக மாவாக்கப்பட்டு மருந்துகளில் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இந்த வழிமுறை மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துகள் மனிதருக்கு ஏற்படுத்தும் பயன் குறைவு. தற்போது, திபெத் மருந்துகளை மேலும் பயன் தரும் முறையிலும், பாதுகாப்பாகவும் சிகிச்சை அளிக்க செய்யும் வகையில், திபெத் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பல நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, அவை தண்ணீர், எரிசாராயம் ஆகியவற்றின் மூலம் மருந்துகளை செறிவூட்டி, பல்வேறு வடிவங்களின் மூலம் மருந்துகளின் ஈரத்தையும் அவற்றிலுள்ள அழுக்குகளையும் நீக்கி, மாத்திரை போன்ற பல்வகை மருந்துகளைத் தயாரிக்கின்றன.

திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் திபெத் மருந்து தயாரிப்பு நிறுவனம் அண்மையில், புதிய உயர் தொழில் நுட்பத் தொழில் மயமாக்கத் திட்டப்பணி மேற்கொண்டு, திபெத் மருந்து தயாரிப்பில் அறிவியல் தொழில் நுட்பத்தின் பங்கை அதிகரிக்க துவங்கியது. இந்தத் தொழில் சாலையின் தலைவர் KungaNorbu கூறியதாவது

9 கோடியே 80 இலட்சம் யுவானுக்கு அதிகமான தொகை இத்திட்டப்பணியில் செலவு செய்யப்பட்டது. இதில் நடுவண் அரசின் ஒரு கோடி யுவான் உதவி தொகை உள்ளது. அறிவியல் தொழில் நுட்பம் மூலம், திபெத் மருந்தின் மைய போட்டியாற்றலை உயர்த்தியுள்ளோம் என்றார் அவர்.

திபெத் மருந்துகளின் வேகமான வளர்ச்சியைத் தூண்டும் வகையில், இத்துறையிலான பணி வலுப்படுத்தப்பட 10க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் திபெத் அரசு முடிவு செய்துள்ளது. திபெத் மருந்து உள்ளூர் வளர்ச்சியில் முக்கிய தொழில்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது. அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க துறையிலான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று KungaNorbu கருத்து தெரிவித்தார். 2002ம் ஆண்டு, தேசியளவிலான நல்ல தயாரிப்பு என தேசிய நிலை வரையறையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவீன மயமான மருந்து தயாரிப்பு இயந்திரங்களை வாங்கியது. தற்போது அதன் ஆண்டு தயாரிப்பு திறன் 130 டன்னைத் தாண்டியுள்ளது. 350க்கு மேற்பட்ட திபெத் மருந்துகளை தயாரிக்க முடிகின்றது.

1 2 3 4