• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-27 15:39:11    
சூரிய மின்னாற்றல் வளர்ச்சி

cri

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரியாற்றல்களை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் உலகளவில் தொடர்கின்றன. கடந்த ஆண்டில் ஏற்பட்ட எண்ணெய் விலையேற்றம் மாற்று எரியாற்றல்களை வளர்க்க வேண்டியதன் கட்டாயத்தை உலகிற்கு உணர்த்தியது. அதிலும் மாசுபாடுகள் குறைவான, சுற்றுச்சூழலுக்கு தகுந்த எரியாற்றல் மூலவளங்களை வளர்ப்பது தான் நீணடகால வளர்ச்சிக்கு ஏற்புடையதாகும் எனவும் உணரப்பட்டது. சூரிய ஆற்றலை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வது மாசுபாடுகள் குறைந்த, சுற்றுச்சூழலுக்கு அதிக தீங்கிழைக்காத ஒன்றாக விளங்குகிறது. 1970 களிலேயே அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சூரிய ஆற்றல் மூலம் மின் உற்பத்தியை வளர்க்க தொடங்கின. ஜப்பான், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சூரிய ஆற்றல் பற்றிய ஆய்வு மற்றும் வளர்ச்சியை அரசுகளே நிதி ஒதுக்கீடு அளித்து வளர்த்தன. குடும்பத்திற்கான சூரிய மின்னாற்றல் திட்டம் மூலம் அதிக எண்ணிக்கையிலான வீடுகளின் கூரைகளில் சூரிய மின் உற்பத்தி வசதிகளை ஜெர்மனி பொருத்தியுள்ளது. சூரிய மின்னாற்றலை பயன்படுத்துவோரின் கட்டண அளவை, மூன்று முதல் ஐந்தாண்டுகளுக்குள் பாதியளவு குறைப்பதற்கான திட்டத்தை ஜப்பான் தொடங்கியுள்ளது. சீனாவில் சூரிய மின்னாற்றல் வளர்ச்சிக்கான வாய்ப்பு பற்றி இன்றைய நிகழ்ச்சியில் அறியதருகின்றோம்.
1 2 3 4