• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-27 15:39:11    
சூரிய மின்னாற்றல் வளர்ச்சி

cri

2009 ஆம் ஆண்டு உலகளவில் சூரிய மின் உற்பத்தி தொகுதிகளின் விலை 20 விழுக்காடு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகால தொடர்ந்த அதிகரிப்புக்கு பின்னர் உலகளவிலான வளர்ச்சி வேகம் குறைவது இவ்வாண்டாகும். இதன் விளைவாக சூரிய மின்னாற்றல் தொகுதிகளின் தயாரிப்பு அதிகமாகி தேவை குறையும் நிலை உருவாகும் என்று அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஐவினியோக கழகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தேவைக்கு வின்யோகத்திற்கும் இடையிலான இடைவெளி வளர்வதால் விலையும், சந்தை வருமானமும் 2009 ஆண்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய சூரிய மின்னாற்றல் தொகுதிகளை பொருத்தும்போது ஒரு வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு 4.20 அமெரிக்க டாலர்கள் செலவு என்ற நிலை தற்போது நிலவி வருகிறது. ஆனால் 2009 ஆண்டின் இறுதியில் 2.50 முதல் 2.75 அமெரிக்க டாலர் செலவு என்ற நிலை உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் தயாரிக்கப்படும் 98 விழுக்காட்டு மின் உற்பத்தி தொகுதிகள் வெளிநாடுகளில் விற்கப்படுவதால், அதிகமாக வெளிநாடுகளையே நம்பியிருக்கும் தொழில்துறையாக சீன சூரிய மின் உற்பத்தி தொகுதிகளின் சந்தை அமைந்துள்ளது. எனவே உலக பொருளாதாரா நெருக்கடி இத்துறைக்கு அதிக பாதிப்பை உருவாக்கியுள்ளதாக சீன அறிவியல் கழகத்தின் சூரிய மின் உற்பத்தி தொழில்துறை ஆய்வாளர் Ma Shenghong தெரிவித்தார். ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி நாடுகளில் ஏற்பட்டிருந்த அதிக தேவை சீன சூரிய மின் உற்பத்தி தொகுதிகளின் தயாரிப்பையும் விலையையும் உயர்வாக வைத்திருந்தது. ஆனால் இந்த உலக பொருளாதாரா நெருக்கடி அந்த வளர்ச்சியை தடுத்துவிட்டது என்று சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் கீழுள்ள எரியாற்றல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் Shi Jingli தெரிவித்தார். ஆனால், குறுகியகாலம் சீன சூரிய மின் உற்பத்தி தொகுதிகளின் தயாரிப்பு தொழில் துறை நெருக்கடியை சந்தித்தாலும் நீண்ட கால அளவில் அத்தொழில்துறை ஒருங்கிணைக்கப்படவும், அதிக தரமுடையதாகவும் எழுச்சிபெறும் என்று பரவலாக நம்பப்படுகிறது.

1 2 3 4