
சீன சூரிய மின்னாற்றல் உற்பத்தி சங்க புள்ளிவிபரங்கள் படி, 2007 ஆண்டு சீனா 1180 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய மின் உற்பத்தி தொகுதிகளை தயாரித்தது. இதன் மூலம் சூரிய மின்னாற்றல் உற்பத்தி தொகுதிகள் தயாரிப்பில் உலகிலேயே முதலிடத்தை பெற்றது. பாரம்பரிய எரியாற்றலை பாதுகாக்கவும், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் சூரிய மின் உற்பத்தியை வளர்க்க ஊக்கமும் சலுகைகளும் வழங்கின. எனவே சூரிய மின்னாற்றல் உற்பத்தி தொகுதிகளின் தேவை இந்நாடுகளில் அதிகமாயின. சீனாவில் தயாரிக்கப்பட்ட சூரிய மின் உற்பத்தி தொகுதிகள் தேவை அதிகமான வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சீனாவின் Jiangsu மாநிலம் 2007 ஆம் ஆண்டு 1000 மொகாவாட் மின் உற்பத்தி தொகுதிகளை தாயரிக்கும் திறனை அடைந்தது. இது உலக சந்தையின் நான்கில் ஒரு பகுதி தயாரிப்பாகும். சூரிய மின் உற்பத்தி தொகுதிகளின் தயாரிப்பு செலவை குறைக்க பெருமளவிலான உற்பத்தி வழிமுறைகளை தேடிய சீன நிறுவனங்கள், தங்களின் தயாரிப்பை ஆண்டுதோறும் விரிவாக்கி வந்தன. எனவே மின் உற்பத்தி தொகுதிகளின் தயாரிப்பு செலவும் குறைய தொடங்கியது. சீன சூரிய மின்னாற்றல் தொகுதிகளின் தயாரிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளாக உயர்வான வளர்ச்சியை கண்டது. ஆனால் 2008 ஆம் ஆண்டில் தொடங்கிய உலக பொருளாதார நெருக்கடியால் 2009 ஆம் ஆண்டு சூரிய ஆற்றல் மின் உற்பத்தி தொகுதிகளின் விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மிக விரைவாக வளர்ந்துவரும் சூரிய மின்னாற்றல் உற்பத்தியின் அதிகரிப்பு வேகம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
1 2 3 4
|