• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-27 15:39:11    
சூரிய மின்னாற்றல் வளர்ச்சி

cri

இந்நிலையில் சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை சீனாவில் ஊக்குவிக்க சீன அறிவியல் கழகம் முடிவு செய்யதுள்ளது. 2050 ஆம் ஆண்டுக்குள் சீனாவின் மிக முக்கிய மூலஆற்றலாக சூரிய ஆற்றலை உருவாக்க முயற்சிகளை அது மேற்கொண்டுள்ளது. அறிவியலாளர்களும் நிபுணர்களும் இதற்கான செயல்திட்டத்தை உருவாக்க இக்கழகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும், அது சூரிய ஆற்றல் தொடர்புடைய அறிவியல் புத்தாக்க முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் மேடையாக விளங்கும் என்றும் சீன அறிவியல் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இத்திட்டம் மூன்று பகுதிகளாக நிறைவேற்றப்படவுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குள் சூரிய மின்னாற்றல் பயன்பாட்டிற்காக வினியோகிக்கப்படும். 2025 ஆம் ஆண்டுக்குள் மாற்று எரியாற்றலாக பயன்படும் அளவுக்கு வளர்ச்சிபெறும். 2035 ஆண்டிற்குள் மிக பெருமளவில் பயன்படுத்தப்படும் ஆற்றலாக உருவாக்கப்படும் என தெரிகிறது.

சீனா சூரிய ஆற்றலை வளர்த்தெடுக்கக்கூடிய வாய்ப்பை அதிகமாக பெற்றுள்ளதாக சீன அறிவியல் கழக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சீனாவின் மூன்றில் இரண்டு பகுதி நிலப்பரப்பில் ஆண்டுக்கு 2,200 மனிநேரம் சூரிய ஒளி கிடைக்கின்றது. பரந்த பாலைவன பகுதிகளிலிருந்தும் அதிகமான சூரிய மின்னாற்றலை பெற முடியும். இது அதிக அளவிலான மின்னாற்றலை பெற உதவும். அத்தோடு சூரிய மின்னாற்றலை பயன்படுத்தி பசுங்கூட வாயுக்கள் வெளியேற்றப்படும் அளவை பெருமளவு குறைக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். சூரிய ஆற்றல் பயன்படுத்துவோருக்கு கட்டணத்தை குறைத்தால் புதுப்பிக்கவல்ல இந்த ஆற்றலை சீனாவில் பயன்படுத்துவது அதிகமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


1 2 3 4